#AUSvsIND டெஸ்ட் தொடரில் ஆஸி.,யை வீழ்த்த என்ன செய்யணும்? லெஜண்ட்ஸ் டிராவிட், கும்ப்ளேவின் அட்வைஸ்
First Published Dec 11, 2020, 7:41 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்று தங்களது கருத்துகளை மிகப்பெரிய லெஜண்டுகளான ராகுல் டிராவிட் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அந்த போட்டி பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. கடந்த 2018-2019ம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

அந்த தொடரில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆஸ்திரேலிய அணியில் ஆடவில்லை. இந்த முறை அவர்கள் ஆடுவது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம். அதேவேளையில், இந்திய அணியில் முதல் போட்டிக்கு அடுத்த எஞ்சிய 3 போட்டிகளிலும் விராட் கோலி ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவு; ஆஸி., அணிக்கு கூடுதல் பலம்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?