- Home
- Sports
- Sports Cricket
- ஒரு Pad மட்டும் அணிந்து பயிற்சி செய்த சாய் சுதர்ஷன்! ஸ்பின்னை எதிர்கொள்ள பழைய பிளான்!
ஒரு Pad மட்டும் அணிந்து பயிற்சி செய்த சாய் சுதர்ஷன்! ஸ்பின்னை எதிர்கொள்ள பழைய பிளான்!
இந்திய வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் துருவ் ஜுரேல், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள ஒரு பேட் மட்டும் அணிந்து பயிற்சி செய்தனர். பேட்டை மட்டுமே நம்பி விளையாடவும், LBW ஆவதைத் தவிர்க்கவும் இந்த பழைய பாணி பயிற்சி உதவுகிறது.

ஒரு பேட் பயிற்சி ஏன்?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குத் தயாராகும் விதமாக, இந்திய அணியின் இளம் வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் ஈடன் கார்டன்ஸில் நடந்த வலைப் பயிற்சியில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள ஒரு பேட் (Pad) மட்டும் அணிந்து பயிற்சி மேற்கொண்டனர். இது அபாயகரமானது மட்டுமின்றி, பழைய பாணி பயிற்சி உத்தி ஆகும்.
சுழற்பந்து வீச்சுகளைச் சமாளிப்பதற்காக, பேட்ஸ்மேன்கள் தற்காப்புக்கு Bat-ஐ அதிகம் பயன்படுத்த வேண்டும், Pad-ஐ சார்ந்து இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் பழைய பாணி பயிற்சி முறை இது.
இடது கை ஆட்டக்காரரான சாய் சுதர்ஷன், தனது வலது (முன்) காலைப் பாதுகாக்கும் Pad-ஐ கழற்றிவிட்டுப் பயிற்சி செய்தார். இது, முன் காலை நன்றாக எடுத்து வைத்து விளையாடத் தூண்டும். Pad அணிந்திருந்தால், வீரர்கள் இயல்பாகவே பந்தைத் தடுக்க Bat-ஐ பயன்படுத்துவதற்குப் பதிலாக, முன் Pad-ஐ பயன்படுத்திப் பந்தைத் தடுப்பார்கள். இது LBW அவுட் ஆக வழிவகுக்கும். முன் Pad-ஐ கழற்றுவது, Bat-ஐ மட்டுமே நம்பி விளையாட வற்புறுத்துகிறது.
மேலும், இடது கை வீரர்கள் பந்தை எதிர்கொள்ளும்போது பின்னால் சென்று ஆடும் Back-foot ஆட்டத்தைக் குறைத்து, கீரிஸை விட்டு வெளியேறி (Step Out) சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்க இந்தப் பயிற்சி உதவுகிறது.
துருவ் ஜுரேலின் ரிவர்ஸ் ஸ்வீப்
சாய் சுதர்ஷனைப் போலவே, வலது கை ஆட்டக்காரரான துருவ் ஜுரேலும் தனது வலது (முன்) காலைப் பாதுகாக்கும் Pad-ஐ நீக்கிவிட்டுப் பயிற்சி செய்தார்.
அவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டைப் பயிற்சி செய்வதில் கவனம் செலுத்தினார். வலது கை ஆட்டக்காரர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும்போது, துல்லியமாக பந்தை அடிக்க, வலது காலைப் நன்றாக முன் எடுத்து வைப்பது அவசியம். அதற்கு இந்த ஒரு பேட் பயிற்சி உதவும். குறிப்பாக, உடல் அசைவை சரிசெய்து உறுதிப்படுத்துகிறது.
முன் Pad இல்லாமல் விளையாடுவது ஆபத்தானது என்றாலும், எலும்பு முறிவு போன்ற காயங்களைத் தவிர்க்க வீரர்கள் கூடுதல் கவனத்துடன் Bat-ஐ பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர்.
கில்லுக்குப் பதில் யார்?
சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்தப் பயிற்சியின்போது, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இளம் வீரர் சாய் சுதர்ஷனின் ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்தார்.
கழுத்துத் தசைப்பிடிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை. அவருக்குப் பதிலாக அணியில் இடம்பிடிக்க சாய் சுதர்ஷன் ஒரு முக்கிய போட்டியாளராக உள்ளார்.
எனினும், இந்தப் பயிற்சியில் சாய் சுதர்ஷன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடவில்லை. ஆகாஷ் தீப் அவருக்குப் பந்துவீசியபோது அடிக்கடி அவுட் சைட் எட்ஜ் எடுத்ததைப் பார்க்க முடிந்தது. இதனால், கம்பீரும், பேட்டிங் பயிற்சியாளர் சிதாங்சு கோட்டக்கும் அவரிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடந்தினர்.
மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா உட்பட ஆறு வீரர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்துகொண்டனர். ஜடேஜா நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

