ஆஸி.,யில் நெட் பவுலிங்கில் அசத்தும் நடராஜன்..! அடுத்த அதிரடிக்கு தயார்
First Published Dec 13, 2020, 10:47 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அபாரமாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த நடராஜன், டெஸ்ட் போட்டிகளுக்கான வலைப்பயிற்சியில் அசத்தலாக பந்துவீசிவருகிறார். டெஸ்ட் போட்டிக்கான அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.

ஐபிஎல் 13வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அருமையாக பந்துவீசி, தனது துல்லியமான யார்க்கர்கள் மற்றும் கட்டர்களை பயன்படுத்தி டெத் ஓவர்களை சிறப்பாக வீசி, முக்கியமான கட்டத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார் நடராஜன். ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசியதன் மூலம், முன்னாள், இந்நாள் ஜாம்பவான்கள் பலரையும் கவர்ந்த நடராஜன், தன்னை இந்திய அணி தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் தவிர்க்க முடியாத அளவிற்கு தனது திறமையை நிரூபித்தார்.

அதன் விளைவாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான நெட் பவுலராக அணியில் இடம்பிடித்த நடராஜன், டி20 அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக நீக்கப்பட்டதால், அவரது இடத்திற்கு மாற்று வீரராக தேர்வானார். டி20 அணியில் மட்டுமே தான் நடராஜன் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த நவ்தீப் சைனி காயத்தால் ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம்பிடித்த நடராஜன், முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நடராஜன், அறிமுக போட்டியிலேயே, அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?