மொத்த ஊரும் வீட்டில் கூடிய அந்த ஒரு நொடி..கண்கள் கலங்க.. கை தட்டி, ஆரத்தி சுத்தி, கொண்டாடிய நடராஜன் அம்மா..!
First Published Dec 4, 2020, 7:14 AM IST
இந்திய அணிக்காக தங்கராசு நடராஜன் பந்து வீச ஓடி வந்த அந்த ஒரு நொடி மொத்த தமிழ்நாடும் ஆனந்த கண்ணீர் வடித்தது நிஜம் .இந்திய அணியில் விளையாடும் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனை தொலைக்காட்சியில் பார்த்து அவரது தாய் கை தட்டி ,கண்கள் கலங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையான கடைசி ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணிக்கான ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்தார்.

இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடராஜன் விளையாடும் முதல் போட்டியாகும். ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்ததால், கடைசி போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடியது
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?