ரோகித் சர்மா அவுட் – பாண்டியாவை கேப்டனாக தக்க வைக்கும் மும்பை இந்தியன்ஸ் – MIல் நடக்கும் 4 விஷயங்கள்!
Mumbai Indians Released and Retained Players: ஐபிஎல் 2024 இல் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான சீசனை சந்தித்தது. ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் அணி தடுமாறியது, ரோகித் சர்மா கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதில் சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில், 2025 ஐபிஎல் ஏலத்தில் ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் விடுவிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Mumbai Indians Released and Retained Players
ஐபிஎல் தொடரில் 5 முறை டிராபி வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் மோசமான சீசனாக அமைந்தது. இதில் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதோடு புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.
Mumbai Indians - IPL 2025
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டிரேடு முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். பாண்டியா வந்ததைத் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
எனினும், இந்த சீசனில் ஹைதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வாங்கிய அடியை தொடர்ந்து பாண்டியா என்ன செய்வது என்று புரியாமல் திகைத்த போது ரோகித் சர்மா தான் அணியை வழிநடத்தினார்.
Mumbai Indians Release Rohit Sharma
ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, டீமுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. அதோடு ரோகித் சர்மா ரசிகர்களும் மும்பை இந்தியன்ஸ் அணியை சமூக வலைதளத்தில் பின்பற்றுவதை நிறுத்தினர். இப்படியெல்லாம் விமர்சனத்திற்கு உள்ளான மும்பை இந்தியன்ஸ் இந்த முறை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக ஐபிஎல் 2025 தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோகித் சர்மாவை அணியிலிருந்து விடுவித்து, பாண்டியாவை கேப்டனாக தக்க வைக்கும் என்று ஐபிஎல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால், அப்படி மும்பை விடுவித்தால் ரோகித் சர்மாவை எந்த அணி ஏலத்தில் எடுக்கிறதோ அந்த அணி தான் டிராபி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருக்கும். ஏனென்றால், இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்துள்ளார்.
Mumbai Indians Retained Hardik Pandya
அதோடு, சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வருகிறார். மேலும், ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து ஒரு அணியை வழிநடத்தவே ரோகித் சர்மா விரும்புகிறார். ஆதலால், அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கும் அணிக்கு ரோகித் சர்மா செல்வார் என்று கூறப்படுகிறது.
Suryakumar Yadav - Retained in Mumbai Indians - IPL 2025
தக்க வைக்கப்படும் சூர்யகுமார் யாதவ்:
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்னதாக சூர்யகுமார் யாதவ்வை கேப்டன் பதவிக்கு மும்பை இந்தியன்ஸ் புறக்கணித்தது. சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் கேப்டனுக்கு தகுதி சூர்யகுமார் யாதவ்விற்கு இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஆதலால், அவரை அணி நிர்வாகம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள விரும்பும். மேலும், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த பிறகு தான் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஆதலால் அவருக்கு மும்பை அணியில் இருக்க விரும்புவார்.
Jasprit Bumrah Released - Mumbai Indians - IPL 2025 Mega Auction
விடுவிடுக்கப்படும் ஜஸ்ப்ரித் பும்ரா:
ஐபிஎல் தொடர்களில் அதிக விலைமதிப்பு வீரர்களின் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் இடம் பெற்றிருந்தனர். ரூ.20 கோடிக்கும் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட போதிலும் பந்து வீச்சில் இருவரும் சொதப்பினர்.
ஆனால், இவர்களை விட ஜஸ்ப்ரித் பும்ரா தகுதி வாய்ந்த பவுலராக இருந்தாலும் அவர் தக்க வைக்கப்பட்டால் அவருக்கு ரூ.20 கோடி எல்லாம் கிடைக்காது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் வாங்கிய ரூ.12 கோடி தான் அவருக்கு கிடைக்கும்.
ஒருவேளை அவர் விடுவிக்கப்பட்டு ஏலத்திற்கு சென்றால் அவரது மதிப்பு ரூ.20 கோடி வரையில் அதிகரிக்க கூடும். பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா போன்ற வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.15 கோடிக்கு அதிகமாக கொடுக்க முடியாது. மேலும் மெகா ஏலம் நடந்தால் அவர்களால் பும்ராவை தக்க வைத்துக் கொள்ள முடியாது.
Mumbai Indians - IPL 2025 Mega Auction
எப்படியும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்ற மும்பை இந்தியன்ஸ் ஆயத்தாக திரும்ப வரும் என்று கூறப்படுகிறது.