- Home
- Sports
- Sports Cricket
- ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் MI இத்தனை சாதனைகள் படைத்திருக்கா? டிராபி கன்ஃபார்மா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் MI இத்தனை சாதனைகள் படைத்திருக்கா? டிராபி கன்ஃபார்மா?
Mumbai Indians IPL Records in Playoffs : ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளில் 2015 முதல் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
ஐபிஎல் 2025 எலிமினேட்டர்
Mumbai Indians IPL Records in Playoffs : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 14 போட்டிகலில் குஜராத் டைட்டன்ஸ் 9 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்திருந்தது.
ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிச்சுற்று போட்டி
பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. இதன் மூலமாக ஆர்சிபி 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு 4ஆவது முறையாக ஆர்சிபி இப்போது இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. கடந்த சீசனில் ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று போட்டியுடன் ஆர்சிபி வெளியேறியது.
ஐபிஎல் இறுதிப் போட்டி
ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் என்ன சுவாரஸ்யம் என்றால், முதல் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்ற அணி தான் 14 இறுதிப் போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி கண்டு டைட்டில் வென்றுள்ளது.
எலிமினேட்டர் சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி
முதல் தகுதிச் சுற்று போட்டியைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவ் 47 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்தனர்.
ஏமாற்றிய சுப்மன் கில்
திலக் வர்மா 25 ரன்கள் எடுக்க, ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் எடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் 229 ரன்கலை கடின இலக்காக கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது. இதில் கேப்டன் சுப்மன் கில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவுக்கு 2 முறை கேட்ச் விட்ட குசால் மெண்டிஸ் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20 ரன்னில் வெளியேறினார்.
சாய் சுதர்சன் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி
அப்போது தான் சாய் சுதர்சன் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி காட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் குஜராத் வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. வாஷி 48 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் 80 ரன்களில் வெளியேறினார்.
குஜராத் டைட்டன்ஸ் 208 ரன்கள்
அப்போது குஜராத் டைட்டன்ஸ் 15.4 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 26 பந்துகளில் குஜராத் வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பின் வரிசை வீரர்கள் ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 24, ஷாருக் கான் 13 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
எலிமினேட்டர் சுற்று போட்டியுடன் குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது
அதோடு ஐபிஎல் 2025 எலிமினேட்டர் சுற்று போட்டியுடன் குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது. இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியானது 2ஆவது தகுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறியது. இதில் நாளை ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2025 தகுதிச் சுற்று போட்டி 2ல் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியானது 10 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 2ஆவதாக பேட்டிங் செய்த 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வி அடைந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 12 பிளே ஆஃப் போட்டிகளில் 10ல் வெற்றி பெற்றுள்ளது.