#IPL2021 முதல் போட்டியில் #MIvsRCB பலப்பரீட்சை..! மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 14வது சீசனின் முதல் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில், 5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸும், முதல் முறையாக கோப்பையை வெல்ல துடிக்கும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன.
இன்று இரவு சென்னையில் 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளுமே இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள நிலையில், இரு அணிகளில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் 10 வீரர்கள் கிட்டத்தட்ட நிரந்தரமாக ஆடும் லெவனில் ஆடுபவர்கள். போட்டி சென்னையில் நடப்பதால், ராகுல் சாஹருடன் கூடுதல் ஸ்பின்னர் எடுக்கப்படலாம். எனவே பியூஷ் சாவ்லா/ஜெயந்த் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் 11வது வீரராக ஆடுவார்.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், பியூஷ் சாவ்லா/ஜெயந்த் யாதவ், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ர
உத்தேச ஆர்சிபி அணி:
விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், முகமது அசாருதீன், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஹாமிசன், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.