- Home
- Sports
- Sports Cricket
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் தோனி; என்ன தெரியுமா?
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் தோனி; என்ன தெரியுமா?
MS Dhoni Ready to Set a New Record : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் 2025 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். அது என்ன சாதனை என்பதை பார்க்கலாம்.

MS Dhoni Ready to Set a New Record : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பையின் கோட்டையான வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான 38அவது லீக் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முக்கியமான சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். அது என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
சென்னையில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 25ஆவது லீக் போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். அந்தப் போட்டியில் சிஎஸ்கே தோற்றாலும், லக்னோவில் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சிஎஸ்கே விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளுன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடமான 10 ஆவது இடத்தில் உள்ளது.
எஞ்சிய 7 போட்டிகளில் கட்டாய வெற்றியை நோக்கி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியில் தோனி சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். இந்தப் போட்டியில் தோனி 4 சிக்ஸர்கள் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 350 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இதுவரையில் 398 டி20 போட்டிகளில் விளையாடிய தோனி இதுவரையில் 346 சிக்ஸர்களும், 527 பவுண்டரிகளும் விளாசியுள்ளார். கடந்த 2006 முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் தோனி 398 டி2 0 போட்டிகளில் விளையாடி 7562 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 84 ரன்கள் (நாட் அவுட்) எடுத்துள்ளார். ஒரு சதம் கூட அடிக்காத தோனி 28 அரைசதங்கள் அடித்துள்ளார்.
தற்போது டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 35ஆவது இடத்தில் இருக்கும் தோனி, இந்தப் போட்டியில் 4 சிக்ஸர்கள் அடித்தால் 33ஆவது இடத்திற்கு முன்னேறுவதோடு, சஞ்சு சாம்சன் (347 சிக்ஸர்கள்) மற்றும் கிளென் பிலிப்ஸ் (350 சிக்ஸர்கள்) ஆகியோரது அதிக சிக்ஸர்கள் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் கிறிஸ் ஜெயில் தான் 1056 சிக்ஸர்கள் உடன் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். 2ஆவது இடத்தில் கெரான் பொல்லார்டு 908 சிக்ஸர்களுடன் இருக்கிறார். ஆண்ட்ரே ரஸல் 736 சிக்ஸர்கள் உடன் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறார். இந்திய வீரர் ரோகித் சர்மா 531 சிக்ஸர்கள் உடன் 7ஆவது இடத்தில் இருக்கிறார். மேக்ஸ்வெல் 530 சிக்ஸர்களுடன் 8ஆவது இடத்தில் இருக்கிறார்.