MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஐபிஎல்லுக்கு குட்பை சொல்லும் தோனி.. சிஎஸ்கே கேப்டன்சியிலும் வரப்போகும் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்!

ஐபிஎல்லுக்கு குட்பை சொல்லும் தோனி.. சிஎஸ்கே கேப்டன்சியிலும் வரப்போகும் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்!

தோனியின் ஓய்வு குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ள நிலையில், சஞ்சு சாம்சனை சிஎஸ்கே கேப்டனாக்க‌ பேச்சுவார்த்தை நடப்பதாக வரும் செய்திகள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Mar 21 2026, 08:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன்
Image Credit : Google

தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன்

ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் 2026 தொடருக்கு தயாராகி வருகிறார். தோனியின் ஐபிஎல் எதிர்காலம் பற்றி கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது 2026 ஐபிஎல் சீசன்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் ஜெர்சியில் தோனியின் கடைசி ஆட்டமாக இருக்க வாய்ப்புள்ளது என்று உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். இந்த சீசனில் தோனியின் பங்களிப்பில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்றும் உத்தப்பா கணித்துள்ளார்.

24
பணியை குறைக்கும் தோனி
Image Credit : our own

பணியை குறைக்கும் தோனி

இதுகுறித்து பேசிய ராபின் உத்தப்பா, ''இந்த வருடம் தோனி ஒரு 'மென்டார் ப்ளேயராக' அதிக கவனம் செலுத்துவார். அவர் 7-வது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று நான் நினைக்கவில்லை, ஒருவேளை 8-வது இடத்திற்கு மாறலாம். ஓய்வுக்கு முன்னதாக, அணியில் தனது இருப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள முயற்சி செய்வார். அப்போதுதான், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் முழு திறமையும் வெளிவரும்" என்றார்.

Related Articles

Related image1
தளபதிக்காக சிஎஸ்கே நிர்வாகத்துடன் மோதிய தோனி.. கண்டிஷனால் கடும் கோபம்.. கூல் கேப்டன் பொறுமையிழந்தது ஏன்?
Related image2
7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
34
 அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சன்?
Image Credit : Instagram/chennaiipl

அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சன்?

தோனியின் ஓய்வு குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ள நிலையில், சஞ்சு சாம்சனை சிஎஸ்கே கேப்டனாக பேச்சுவார்த்தை நடப்பதாக வரும் செய்திகள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனிக்குப் பிறகு சஞ்சுவை தயார்படுத்துவதே இதன் நோக்கம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். 44 வயதான தோனி, தற்போது சென்னையில் அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாடுவார் என CSK சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனாலும், அணி நிர்வாகத்தின் முடிவின்படி, அவரது பணிச்சுமை கட்டுப்படுத்தப்படலாம்.

44
மீண்டு வருவதே சென்னையின் இலக்கு
Image Credit : Instagram

மீண்டு வருவதே சென்னையின் இலக்கு

கடந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றிலேயே முதல்முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இந்த சரிவிலிருந்து மீண்டு, கெய்க்வாட் தலைமையில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கவே சென்னை அணி ரெடியாகி வருகிறது. இந்த கம்பேக்கிற்கு தோனியின் இருப்பு மிக முக்கியமானது. ஐபிஎல் வரலாற்றில் 278 போட்டிகளில் 5439 ரன்கள் குவித்துள்ள தோனி, ஐந்து முறை சென்னையை கோப்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த சீசன் தோனியின் கெரியரில் ஒரு அழகான கடைசி அத்தியாயமாக அமையுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சிஎஸ்கே
ஐபிஎல்
எம். எஸ். தோனி
எம். எஸ். தோனி சி.எஸ்.கே
சஞ்சு சாம்சன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav டீம் இந்தியாவுக்கு வந்தா ரொம்ப டேஞ்சர்... பேட்டிங்கையே வீடியோ கேம் மாதிரி விளையாடுறான்..
Recommended image2
ஜடேஜாவையே மிரட்டிய 14 வயது சிறுவன்! வைபவ் சூர்யவன்ஷியின் அனல் பறக்கும் பேட்டிங்
Recommended image3
6 மாதமாக மதுபானத்தை தொடாத இந்திய வீரர்.. மீண்டும் அணிக்கு திரும்புவேன் என சபதம்!
Related Stories
Recommended image1
தளபதிக்காக சிஎஸ்கே நிர்வாகத்துடன் மோதிய தோனி.. கண்டிஷனால் கடும் கோபம்.. கூல் கேப்டன் பொறுமையிழந்தது ஏன்?
Recommended image2
7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved