- Home
- Sports
- Sports Cricket
- டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த 4ஆவது இந்திய வீரராக எம் எஸ் தோனி சாதனை!
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த 4ஆவது இந்திய வீரராக எம் எஸ் தோனி சாதனை!
MS Dhoni Most Sixes in T20 Cricket : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 62ஆவது லீக் போட்டியில் தோனி ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலமாக 350 T20 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், தோனி 350 T20 சிக்ஸர்கள்
MS Dhoni Most Sixes in T20 Cricket : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 350 T20 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார். ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய 4ஆவது இந்திய வீரர் ஆவார். தோனியின் 16 ரன்கள் இன்னிங்ஸ் துஷார் தேஷ்பாண்டேயின் கேட்ச்சில் முடிந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி, நேற்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான போட்டியில் 350 T20 சிக்ஸர்கள் அடித்த 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த தோனி
முதல் இன்னிங்ஸின் 16வது ஓவரில் ரியான் பராக் தனது சுழல் பந்துவீச்சால் சென்னை அணித்தலைவரை ஏமாற்ற முயன்றபோது, தோனி அசராமல் காத்திருந்து பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். ரோகித் சர்மா (542), விராட் கோலி (434) மற்றும் சூர்யகுமார் யாதவ் (368) ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய நான்காவது இந்திய வீரர் ஆனார். ஒட்டுமொத்தமாக, கிறிஸ் கெய்ல் 1,056 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
எம் எஸ் தோனி 16 ரன்கள்
துஷார் தேஷ்பாண்டேயின் கேட்ச்சில் தோனியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் தோனி 16 ரன்கள் எடுத்த நிலையில், துஷார் தேஷ்பாண்டேயின் அற்புதமான கேட்ச்சில் ஆட்டமிழந்தார். சென்னையின் இன்னிங்ஸில் ஆயுஷ் மாத்ரே 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். 17 வயது இளம் வீரர் ஆட்டமிழந்த பிறகு, CSK அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. சிவம் துபே மற்றும் டிவால்ட் பிரேவிஸ் 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னையை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 187/8 ரன்கள்
ஆகாஷ் மத்வால் மற்றும் யுத்வீர் சிங் CSK-வை 187/8 என்கிற ஸ்கோருக்கு கட்டுப்படுத்தினர். CSK மீண்டும் போட்டிக்குள் வரும் சமயத்தில், ஆகாஷ் மத்வால் பிரிவிஸை (42) ஆட்டமிழக்கச் செய்தார். துபே கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆகாஷிடம் விக்கெட்டை இழந்தார். அன்ஷுல் கம்போஜ் பவுண்டரி அடித்தார், நூர் அஹ்மத் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க சென்னை 187/8 என்கிற ஸ்கோரை எட்டியது.