Best Finishers ODI Cricket:எம்.எஸ் தோனி முதல் மைக்கேல் பெவன் வரையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பினிஷர்கள்!
Best Finisher in ODI Cricket: கிரிக்கெட்டில், போட்டியை சிறப்பாக முடித்து கொடுப்பது என்பது முக்கியமானது. சிறந்த பினிஷரால் மட்டுமே டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தர முடியும்.
MS Dhoni, Chennai Super Kings
Best Finisher in ODI Cricket:
கிரிக்கெட்டை பொறுத்த வரையில் போட்டியை முடித்து கொடுப்பது என்பது முக்கியமான வேலை. சிறந்த பினிஷரால் மட்டுமே போட்டியை சிறப்பாக முடித்து கொடுக்க முடியும். தொடக்கத்தில் பேட்டிங்கில் சொதப்பினாலும், டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்கள் எடுக்க வேண்டியது என்பது பினிஷரது பொறுப்பு.
கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இது போன்று பல வீரர்கள் சாதனை படைத்து வருகின்றனர். அணிக்கான போட்டியை நிறைவு செய்வது மட்டும் அவர்களது வேலை. ஆனால், டெத் ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்வது என்பது யாருக்கும் எளிதானது அல்ல.
ஆனால், கடினமான சூழலிம் கூட சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடிய அதிரடி பேட்ஸ்மேன்களால் மட்டுமே சிறந்த பினிஷராக முடியும். அந்த வரிசையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பினிஷர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…
MS Dhoni, CSK, Chennai Super Kings
MS Dhoni Best Finisher: கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் பேட்டிங் வரிசையில் ஒவ்வொரு பேட்ஸ்மேனின் பங்கும் முன்பே வரையறுக்கப்பட்டுள்ளது. அணியின் வெற்றிக்கு பேட்டிங், பவுலிங், பீல்டிங் எல்லாமே முக்கியமானது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதே அதிரடியை தொடர்ந்து ரன்கள் குவித்தால் மட்டுமே அந்த அணியால் அதிக ரன்கள் குவிக்க முடியும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி கிரிக்கெட் இதுவரை பார்த்திராத ஒரு சிறந்த பினிஷராக காட்சி அளிக்கிறார். எப்போதும் அழுத்தம் நிறைந்த போட்டியின் போது பொறுமை இழக்காத தனது குணம், விளையாட்டிற்கான அவரது அணுகுமுறை தோனியை வேறுபடுத்தி காட்டுகிறது. கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி ரன் சேஸிங்கில் மட்டும் 47 முறை அவுட்டாகாமல் இருந்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.
MS Dhoni
சிறந்த பினிஷருக்கன உதாரண பட்டியலில் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணிக்கு டிராபியை வென்று கொடுத்தார். எப்போதும் சூழ்நிலைகளின் தேவைக்கு ஏற்ப விளையாட்டு திறமையை மாற்றியமைத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுக்கிறார். தோற்கும் போட்டியிலும் கூட ஒரு ரன்னில் அணிக்கு வெற்றி தேடிக் கொடுக்கிறார்.
350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 6ஆவது வரிசையில் களமிறங்கிய தோனி 129 போட்டிகளில் 4164 ரன்கள் குவித்துள்ளார்.
AB de Villiers
Best Finisher ODI Cricket: ஏபி டி வில்லியர்ஸ்:
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் இந்தப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். சிறந்த அதிரடி பேட்ஸ்மேனுக்கு உதாரணமாக இருப்பவர் டிவிலியர்ஸ். மைதானத்தில் அனைத்து பக்கங்களிலும் பந்துகளை பறக்க விடுவார். மிஸ்டர் 360 டிகிரி என்றும் அழைக்கப்பட்டார். டிவிலியர்ஸ் 218 போட்டிகளில் விளையாடி 9577 ரன்கள் குவித்துள்ளார். டிவிலியர்ஸ் 4ஆவது வரிசையில் களமிறங்கி 5736 ரன்கள் குவித்துள்ளார்.
Michael Bevan
Best Finisher in ODI:
சிறந்த பினிஷர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்திருப்பவர் மைக்கேல் பெவன். பல போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிந்த போதிலும் கூட தனது சிறப்பான பேட்டிங்கால் அணியை மீட்டு வந்துள்ளார். பெவன் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,912 ரன்கள் குவித்துள்ளார். பெவன் விளையாடிய போட்டிகளில் கிட்டத்தட்ட 67 சதவிகிதம் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.