வேஷ்டி சட்டையில் வந்து லைகா கோவை கிங்ஸ் அணிக்கு ஆதரவு கொடுத்த அருண் விஜய்!
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு வேஷ்டி சட்டையில் வந்த அருண் விஜய் லைகா கோவை கிங்ஸ் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
அருண் விஜய் - ஏஎல் விஜய்
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7ஆவது சீசனுக்கான இறுதிப் போட்டி தற்போது திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் நிறுவன மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சியும், நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் மைதானத்தில் அரங்கேறியது.
டிஎன்பிஎல் 2023 ஃபைனல்
இந்தப் போட்டியை நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஏஎல் விஜய் இருவரும் நேரில் வந்து கண்டு ரசித்துள்ளனர். ஏஎல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஷன் சேப்டர் 1. இந்தப் படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பாரத் போபனா, ஜேசன் ஷா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ்
மிஷன் சேப்டர் 1 படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், திருநெல்வேலியில் நடந்து வரும் டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு திருநெல்வேலிக்கு வந்த அருண் விஜய் மற்றும் ஏஎல் விஜய், லைகா கோவை கிங்ஸ் அணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்தப் போட்டியை பார்ப்பதற்கு அருண் விஜய் வேஷ்டி சட்டையில், தலையில் குல்லா வைத்துக் கொண்டு கம்பீரமாக வந்துள்ளார்.
லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ்
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடியது.
லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ்
லைகா கோவை கிங்ஸ்:
எஸ் சுஜய், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), பி சச்சின், யு முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), ராம் அரவிந்த், ஆதிக் யுஆர் ரஹ்மான், எம் முகமது, மணிமாறன் சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், வள்ளியப்பன், யுதீஸ்வரன்
அருண் விஜய்
நெல்லை ராயல் கிங்ஸ்:
அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருசுவாமி, நிதிஷ் ராஜகோபால், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், சோனு யாதவ், என்.எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, எஸ் மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்ஷய் ஜெயின் எஸ்
மிஷன் சேப்டர் 1
அதன்படி, எஸ் சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும், சுஜய் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த சச்சினும் 12 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த முகிலேஷ், சுரேஷ் குமாருடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் 31 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்திருந்த நிலையில், சுரேஷ் குமார் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். அவர், 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
லைகா கோவை கிங்ஸ்
இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஷாருக்கானும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தான் ஆதிக் உர் ரஹ்மான் களமிறங்கினார். அவர், 21 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 50 ரன்கள் சேர்த்து கடைசியாக ஆட்டமிழந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது.
டிஎன்பிஎல் 2023 ஃபைனல்
பந்து வீச்சு தரப்பில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் சோனு யாதவ் 2 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும், மோகன் பிரசாத் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 4 போட்டிகளில் லைகா கோவை கிங்ஸ் அணி 3 போட்டிகளிலும், நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில், லைகா கோவை கிங்ஸ் அணி, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியுடன் இணைந்து டைட்டில் வென்றுள்ளது.
லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ்
ஆனால், நெல்லை ராயல் கிங்ஸ் அணி இதுவரையில் ஒரு முறை கூட டைட்டில் பெறவில்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிக்கு வந்த 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சம் வீதம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.