கோலி பேட்டிங் ஆடுனா என் மகன் தூக்கத்துல இருந்து எழுந்து பார்ப்பான்..! இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

First Published Dec 2, 2020, 4:39 PM IST

விராட் கோலி பேட்டிங் ஆடினால் தனது மகன் தூக்கத்தில் இருந்துகூட எழுந்து பார்ப்பான் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

<p>சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். சிறுவர்களின் ஆதர்சன கிரிக்கெட் நாயகனாக திகழ்ந்துவருகிறார் கோலி.</p>

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். சிறுவர்களின் ஆதர்சன கிரிக்கெட் நாயகனாக திகழ்ந்துவருகிறார் கோலி.

<p>ஃபார்மில் இல்லாத காரணத்தால் ஐபிஎல்லில் சரியாக ஆடாத கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் தொடரிலும் பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியாமல் திணறிவருகிறார். ஒருநாள் தொடர் இன்று முடியும் நிலையில், டி20 தொடர் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல், இந்தியா திரும்புகிறார் கோலி.</p>

ஃபார்மில் இல்லாத காரணத்தால் ஐபிஎல்லில் சரியாக ஆடாத கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் தொடரிலும் பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியாமல் திணறிவருகிறார். ஒருநாள் தொடர் இன்று முடியும் நிலையில், டி20 தொடர் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல், இந்தியா திரும்புகிறார் கோலி.

<p>இந்நிலையில், கோலி ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும் என்றும் கோலி இல்லாமல் இந்திய அணியால் அந்த 3 டெஸ்ட் போட்டிகளையும் ஜெயிக்க முடியாது என்றும் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.</p>

இந்நிலையில், கோலி ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும் என்றும் கோலி இல்லாமல் இந்திய அணியால் அந்த 3 டெஸ்ட் போட்டிகளையும் ஜெயிக்க முடியாது என்றும் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

<p>கோலி குறித்து பேசிய மைக்கேல் வான், என் மகன் தூங்கினால் கூட, கோலி பேட்டிங் ஆடும்போது எழுப்பிவிட சொல்வான். அவன் தூங்கும்போது கோலி பேட்டிங் ஆடினால், அவனை எழுப்பிவிட்டால் அமர்ந்து கோலியின் பேட்டிங்கை பார்ப்பான். அதேவேளையில் கோலி அவுட்டாகிவிட்டால் எழுந்து சென்றுவிடுவான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி ஆடாத கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஜெயிப்பதே கடினம் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.</p>

கோலி குறித்து பேசிய மைக்கேல் வான், என் மகன் தூங்கினால் கூட, கோலி பேட்டிங் ஆடும்போது எழுப்பிவிட சொல்வான். அவன் தூங்கும்போது கோலி பேட்டிங் ஆடினால், அவனை எழுப்பிவிட்டால் அமர்ந்து கோலியின் பேட்டிங்கை பார்ப்பான். அதேவேளையில் கோலி அவுட்டாகிவிட்டால் எழுந்து சென்றுவிடுவான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி ஆடாத கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஜெயிப்பதே கடினம் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?