Ind Vs Aus: மெல்பர்னில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்: 4வது டெஸ்டில் எகிறி அடிக்கப்போவது யார்?
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஆட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும்? தொடரில் முன்னேறுவது யார் என்று ஆராய்வோம்.
Ind Vs Aus
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் (Test Cricket) போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியை இந்தியர்கள் கொண்டாடி முடிப்பதற்குள் ஆஸ்திரேலியா பயங்கர அடியைப் பதிவு செய்தது. அதன்படி இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. மேலும் தொடரும் 1 - 1 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டது.
Bumrah
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கமே ஓங்கி இருந்தது. ஆனால், மழையின் குறுக்கீட்டால் 5 நாள் போட்டியில் பெரும்பாலான நேர ஆட்டம் தடை பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி (Team India) கடுமையாகப் போராடி போட்டியை டிரா செய்தது. 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனில் தொடர்கிறது.
Rohit Sharma
இரு அணிகள் இடையயான 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட்டாக நாளை (26ம் தேதி) தொடங்குகிறது. இந்திய நேரப்படி போட்டி அதிகாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளதால் வெற்றிக்காக இந்திய அணி கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
Ind Vs Aus
பிட்ச் எப்படி?
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டுக்கும் கைகொடுக்கும் என்பதால் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் காத்திருக்கிறது என்றே சொல்லலாம். இரு அணி பேட்ஸ்மேன்கள், பௌலர்கள் என இரு தரப்பினரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் பிட்ச் ரிபோர்ட் படி மைதானம் (Melbourne Cricket Ground) தொடக்கத்தில் பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் கைகொடுக்கும். இதனால் அதிகமான பௌன்சர்களை எதிர் பார்க்கலாம். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். பந்து வீச்சாளர்கள் என்ன தான் முக்கி முக்கி பந்து வீசினாலும் பேட்ஸ்மேன்கள் தங்கள் பேட்டை விளாசுவது உறுதி.
Virat Kohli
முக்கியத்துவம் பெறும் டாஸ்
போட்டியின் முதல் பாதி பந்து வீச்சுக்கும், இரண்டாம் பாதி பேட்டிங்கிற்கும் சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்பவர்களுக்கு ஆட்டத்தை வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் போட்டியில் டாஸ் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஃபர்ஸ்ட் பேட்டிங்கா? செகண்ட் பேட்டிங்கா?
பிட்சைப் பொருத்த வரை மொத்தமாக 117 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் 57 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 42 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன. 18 போட்டிகளில் டிராவில் முடிவடைந்துள்ளது.