#AUSvsIND டெஸ்ட்: கட்டைய போட்டே சாவடிச்சுருவாப்ள..! மேட்ச்சுக்கு முன்பே இந்திய வீரரை நினைத்து பீதியாகும் ஹைடன்
First Published Dec 14, 2020, 4:58 PM IST
டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை படுபயங்கரமாக சோதிக்கப்போகும் வீரர் யார் என்று மேத்யூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் வென்று சாதனை படைத்தது.

அந்த தொடரில் ஆடாத ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் இம்முறை ஆடுகின்றனர். கடந்த முறை டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு இம்முறை பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ள நிலையில், இந்திய அணியோ மீண்டும் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?