IPL 2023: விராட் கோலி, ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி டாப்பில் வந்த கேஎல் ராகுல் சாதனை!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் 14 ரன்கள் எடுத்ததன் மூலமாக சர்வதேச டி20 போட்டிகளில் 7000 ரன்களை கடந்துள்ளார்.
கேஎல் ராகுல் 7000 ரன்கள்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
கேஎல் ராகுல் 7000 ரன்கள்
இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் டக் அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
கேஎல் ராகுல் 7000 ரன்கள்
அதன் பிறகு விருத்திமான் சகா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். சகா 47 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த அபினவ் மனோகர் 3 ரன்னிலும், விஜய் சங்கர் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 66 ரன்கள் சேர்த்தார். இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.
கேஎல் ராகுல் 7000 ரன்கள்
பின்னர் எளிய இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது. இதில் கைல் மேயர்ஸ் 24 ரன்கள் சேர்த்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் ராகுல் சிறப்பாக ஆடினர். அவர் 14 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச டி20 போட்டிகளில் 7000 ரன்களை கடந்தார். அதுவும் 197 போட்டிகளில் இந்த இலக்கை எட்டியுள்ளார்.
கேஎல் ராகுல் 7000 ரன்கள்
இதற்கு முன்னதாக விராட் கோலி 212 இன்னிங்ஸிலும், ஷிகர் தவான் 246 இன்னிங்ஸிலும், சுரேஷ் ரெய்னா 251 இன்னிங்ஸிலும், ரோகித் சர்மா 258 இன்னிங்ஸிலும் இந்த இலக்கை எட்டியுள்ளனர். இதுவரையில் 210 போட்டிகளில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 6 சதங்கள், 66 அரைசதங்கள் உள்பட 7000 ரன்களை அடித்துள்ளார்.
கேஎல் ராகுல் 7000 ரன்கள்
இதன் காரணமாக விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளிய குறைந்த இன்னிங்ஸிலி 7000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.