SA vs IND Test Live Score: செஞ்சூரியனில் 2ஆவது முறையாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்து விராட் கோலியின் 2 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார்.
South Africa vs India 1st Test
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பாக்ஷிங் டே டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே கனமழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக மைதானத்தில் அதிகப்படியான ஈரப்பதம் இருந்த நிலையில், டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அரைமணி நேரம் தாமதமாக டாஸ் போடப்பட்டது.
KL Rahul
இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா மைதானம் குறித்து நன்கு அறிந்த நிலையில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
KL Rahul
எனினும், கேஎல் ராகுல் நிலையாக நின்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14ஆவது அரைசதத்தை கடந்து விளையாடினார். முதல் நாளில் 59 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை மற்றும் லேசான மழையின் காரணமாக போட்டியானது முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.
KL Rahul
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு நேற்று இரவு முழுவதும் போட்டி நடக்கும் செஞ்சூரியன் மைதானத்தில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக இன்று நடக்கும் போட்டியானது தாமதமாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
SA vs IND 1st Test
அதன்படியே ஈரப்பதம் காரணமாக போட்டியானது தாமதமாக தொடங்கப்பட்டது. இதில், நேற்று வரையில் ரன்கள் அடிக்காத சிராஜ் இன்று 5 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 70 ரன்களில் இருந்த கேஎல் ராகுல் தொடர்ந்து பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி 133 பந்துகளில் சிக்ஸர் அடித்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது 2ஆவது சதம் அடித்து சாதனை படைத்தார்.
KL Rahul Hit his 8th Hundred
மேலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிக முறை சதங்கள் அடித்த விராட் கோலி, திலன் சமர்வீரா, அசார் முகமது ஆகியோரது 2 சதங்கள் சாதனையை கேஎல் ராகுல் சமன் செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 5 முறை சதங்கள் அடித்துள்ளார்.
KL Rahul 2 Centuries in Centurion
ஒரு விக்கெட் கீப்பராக ஆசியாவிற்கு வெளியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட் (4) முதலிடம் பிடித்துள்ளார். விஜய் மஞ்ச்ரேகர், அஜய் ரத்ரா, விருத்திமான் சகா ஆகியோரது ஒரு சதம் சாதனையை கேஎல் ராகுல் சமன் செய்துள்ளார்.
KL Rahul score multiple hundreds in Centurion
ஆனால், செஞ்சூரியனில் அதிக முறை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கேஎல் ராகுல் இன்று படைத்துள்ளார். கடந்த 2021/22 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த போது கேஎல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டியில் 260 பந்துகளில் 123 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
KL Rahul Century
தற்போது 2ஆவது முறையாக செஞ்சூரியனில் 137 பந்துகளீல் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளார். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.