கே. எல். ராகுல் செய்த காரியம் வாயடைத்த ஆஸ்திரேலியா வீரர் 3ஆம் ஒருநாள் போட்டியில் நடந்த மனம்கவர்ந்த சம்பவம்..!
First Published Dec 4, 2020, 2:20 PM IST
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடந்த 3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் முதல் முறையாக களமிறங்கினார் கேமரான் கிரீன். முதல் போட்டி என்பதால் பதற்றமாக இருந்ததாகவும், கே.எல்.ராகுல் பதற்றத்தை குறைக்க உதவினார் என்றும் கேமரான் கிரீன் கூறியுள்ளார்.

கே.எல்.ராகுல் ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று எனக்கு உதவியாக இருந்தார். பதட்டமாக இருக்கிறீர்களா என்று கே.எல்.ராகுல் என்னிடம் கேட்டார். ஆம், நான் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறேன் என்று சொன்ன போது, ‘பயப்படாதீர்கள், நன்றாக விளையாடுங்கள்’ என்று அவர் என்னிடம் கூறினார்” என்று போட்டிக்கு பின்னர் பேசினார் கேமரான் கிரீன்

தனது நாட்டுக்காக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 230 ஆவது வீரர் என்ற பெருமையை கேமரான் கிரீன் பெற்றார். கிரீன் நான்கு ஓவர்கள் வீசினார், அதில் அவர் 27 ரன்களுக்கு விட்டுக்கொடுத்து விக்கெட் எடுக்காமல் சென்றார். பேட்டிங்கில் 5 ஆவது வீரராக களமிறங்கி 27 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?