கே.எல். ராகுல் சதம்: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!
KL Rahul Century : டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய கே.எல். ராகுல், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கே.எல். ராகுல் சதம்
KL Rahul Century : ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் அடையாத ஒரு அரிய சாதனையை டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் படைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரது சதத்தின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. இந்த சதத்தின் மூலம் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சதம்
ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்காக சதம் அடித்திருந்த கே.எல். ராகுல், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும் சதம் அடித்துள்ளார். இது ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாகும்.
கே.எல். ராகுல் சாதனை
சதம் மட்டுமல்லாமல், இந்தப் போட்டியில் கே.எல். ராகுல் வேறு சில சாதனைகளையும் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களை எட்டியுள்ளார். இந்த மைல்கல்லை மிக வேகமாக எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்த சாதனையை கே.எல். ராகுல் 224 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். விராட் கோலி 243 இன்னிங்ஸ்களில் 8000 ரன்களை எட்டினார். சர்வதேச அளவில், கே.எல். ராகுல் 8000 ரன்களை மிக வேகமாக எட்டிய மூன்றாவது வீரர் ஆவார். கிறிஸ் கெய்ல் (213 இன்னிங்ஸ்) மற்றும் பாபர் அசாம் (218 இன்னிங்ஸ்) ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்
1. விராட் கோலி 9
2. ரோஹித் சர்மா 8
3. கே.எல். ராகுல் 7
4. அபிஷேக் சர்மா 7
5. சூர்யகுமார் யாதவ் 6
6. சஞ்சு சாம்சன் 6
7. சுப்மன் கில் 6
8. ருதுராஜ் கெய்க்வாட் 6
ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள்
கே.எல். ராகுல் இதுவரை மொத்தம் 7 டி20 சதங்கள் அடித்துள்ளார். இதில் 5 சதங்கள் ஐபிஎல் போட்டிகளில் அடிக்கப்பட்டவை. ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கே.எல். ராகுல் நான்காவது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள்
1. விராட் கோலி 8
2. ஜோஸ் பட்லர் 7
3. கிறிஸ் கெய்ல் 6
4. கே.எல். ராகுல் 5