IPL 2021 #MIvsKKR எங்களுக்கு அந்த அவசியமே இல்ல.. நல்லா செட் ஆகிட்டோம்..! உத்தேச கேகேஆர் அணி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அபுதாபியில் நடக்கிறது.
ஆர்சிபிக்கு எதிரான வெற்றியின் மூலம் பெற்ற தன்னம்பிக்கையுடன் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது கேகேஆர் அணி. கேகேஆர் அணியின் டாப் ஆர்டர் வீரர்களாக இறங்கிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் அபாரமாக ஆடினர்.
அதன்பின்னர் ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன் ஆகியோரும், பின்வரிசையில் தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன் ஆகிய மூவரும் உள்ளனர்.
ஃபாஸ்ட் பவுலர்களாக லாக்கி ஃபெர்குசன் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும், ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தியும் ஆடுவார். கேகேஆர் அணி காம்பினேஷன் வலுவாக இருப்பதால், அந்த அணியில் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமே இல்லை.
உத்தேச கேகேஆர் அணி:
வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.