சரவெடியாக வெடித்த ஜேசன் ராய், நிதிஷ் ராணா, நல்ல பினிஷிங் கொடுத்த ரிங்கு சிங்; கொல்கத்தா 200 ரன்கள் குவிப்பு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 36ஆவது போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்கள் குவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 36ஆவது போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் இருவரும் இணைந்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 83 ரன்கள் சேர்த்தது. இதில், ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது பங்கிற்கு அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அதன் பிறகு வந்த நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தனர். கேப்டன் ராணா 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கொல்கத்தா அணி சார்பில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் ராணா 100 சிக்ஸர்கள் அடித்து 2ஆவது இடம் பிடித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
முதல் இடத்தில் ஆண்ட்ரே ரஸல் இடம் பெற்றுள்ளார். அவர் 180 சிக்ஸர்கள் அடித்துள்ளார். யூசுப் பதான் 85 சிக்ஸர்களும், ராபின் உத்தப்பா 85 சிக்ஸர்கள் அடித்து அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளனர். இவரைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரும் 31 ரன்களில் வெளியேறினார். ஆண்ட்ரே ரஸில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இறுதியாக வந்த ரிங்கு சிங் மற்றும் டேவிட் வீசா இருவரும் ஓரளவு அடிக்க இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது. பந்து வீச்சில் விஜயகுமார் வைஷாக் மற்றும் ஹசரங்கா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார். இதைத் தொடர்ந்து கடின இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடி வருகிறது.