MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Sports
  • Sports Cricket
  • பிறந்து இன்னும் பார்க்காத மகனுக்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணித்த வருண் சக்கரவர்த்திக்கு குவியும் வாழ்த்து!

பிறந்து இன்னும் பார்க்காத மகனுக்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணித்த வருண் சக்கரவர்த்திக்கு குவியும் வாழ்த்து!

ஆர்சிபி அணிக்கான போட்டியில் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்டநாயகன் விருது வென்ற வருண் சக்கரவர்த்தி பிறந்து இன்னும் பார்க்காத தனது மகனுக்காக இந்த விருதை அர்ப்பணிப்பதாக கூறி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 27 2023, 08:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் முதலில் பந்து வீச்சு தீர்மானித்தார். அதன்படி கேகேஆர் அணி முதலில் ஆடியது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதில், ஜேசன் ராய் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர், 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதே போன்று கேப்டன் நிதிஷ் ராணா, அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார்.
 

39
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அவர் 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த சிக்ஸர்களின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கொல்கத்தா அணி சார்பில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் ராணா 100 சிக்ஸர்கள் அடித்து 2ஆவது இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஆண்ட்ரே ரஸல் இடம் பெற்றுள்ளார். அவர் 180 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
 

49
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இறுதியாக வந்த ரிங்கு சிங் மற்றும் டேவிட் வீசா இருவரும் ஓரளவு அடிக்க இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது. பந்து வீச்சில் விஜயகுமார் வைஷாக் மற்றும் ஹசரங்கா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார். 
 

59
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு அதிரடி நாயகன் பாப் டூப்ளெசிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஷாபாஸ் அஹமது 2 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 

69
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதையடுத்து மஹிபால் லோம்ரார், விராட் கோலியுடன் இணைந்து ரன்கள் சேர்த்தார். ஆனால், அவரும் நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. அவர் 34 ரன்களில் வெளியேறினார். ஒருகட்டத்தில் அரைசதம் அடித்த விராட் கோலி 37 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். ஹசரங்கா 5 ரன்னில் வெளியேற தினேஷ் கார்த்திக் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 

79
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கடைசியில் 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆர்சிபி 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 179 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் இருந்த கேகேஆர், இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 

89
வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி 27 ரன்கள் கொடுத்தார். கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக கேகேஆர் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் காரணமாக இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார்.
 

99
வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தி

இதையடுத்து பேசிய அவர், இந்த விருதை பிறந்து இன்னும் பார்க்காத தனது மகனுக்கும், மனைவிக்கும் அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார். "இதை நான் பிறந்த மகனுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் இன்னும் அவனைப் பார்க்கவில்லை, ஆனால் அவனுக்கும் என் மனைவிக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஐபிஎல் முடிந்த பிறகு அவனைச் சென்று சந்திக்கிறேன்" என்று சக்கரவர்த்தி முடித்தார்.
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved