மும்பைக்கு குட்பை சொல்லும் SKY? கேப்டன்சி வழங்குவதாக வலைவிரிக்கும் கொல்கத்தா
ஐபிஎல் 2025 தொடரில் மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
Suryakumar Yadav
ஐபிஎல் தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று வலுவான அணியாக வளம் வரும் நிலையில் கடந்த 2024 தொடரில் அதிரடியாக கேப்டன் பொறுப்பு ரோகித்திடம் இருந்து பறித்து ஹர்திக் பாண்டியா வசம் வழங்கப்பட்டது. இது அந்த அணியில் ரோகித்துக்கு அடுத்ததாக கருதப்பட்ட சூரியகுமார் யாதவ், பும்ரா ஆகியோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
Suryakumar Yadav
மேலும் கேப்டன்சி மாற்றத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஆரம்பம் முதலே அந்த அணிக்கு எதிராகவும், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இதன் விளைவாக அந்த அணி தொடரில் படுதோல்வி அடைந்து புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
Suryakumar Yadav
கேப்டன் பொறுப்பு மாற்றப்பட்டதால் ரோகித் ஷர்மா அடுத்தத் தொடரில் மும்பையில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை ஏலத்தில் எடுக்க டெல்லி மற்றும் லக்னோ அணிகள் போட்டிப் போடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ரோகித்துக்கு அடுத்த நட்சத்திர வீரராகக் கருதப்பட்ட சூரியகுமார் யாதவ்வும் தற்போது மும்பை அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Suryakumar Yadav
அவரை தங்கள் அணிக்கு இழுக்கும் முயற்சியாக அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்க தயராக இருப்பதாக கொல்கத்தா அணி தரப்பில் அழைப்பு விடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வருகின்ற ஐபிஎல் மெகா ஆக்ஷன் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.