MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 2ஆவது முறையாக கொல்கத்தாவிடம் சரண்டரான ஆர்சிபி; மும்பையை பின்னுக்கு தள்ளி முன்னேறிய கேகேஆர்!

2ஆவது முறையாக கொல்கத்தாவிடம் சரண்டரான ஆர்சிபி; மும்பையை பின்னுக்கு தள்ளி முன்னேறிய கேகேஆர்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Apr 26 2023, 11:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 36ஆவது போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் இருவரும் இணைந்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
ஜேசன் ராய்

ஜேசன் ராய்

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 83 ரன்கள் சேர்த்தது. இதில், ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது பங்கிற்கு அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

38
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அதன் பிறகு வந்த நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தனர். கேப்டன் ராணா 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கொல்கத்தா அணி சார்பில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் ராணா 100 சிக்ஸர்கள் அடித்து 2ஆவது இடம் பிடித்துள்ளார். 

48
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

முதல் இடத்தில் ஆண்ட்ரே ரஸல் இடம் பெற்றுள்ளார். அவர் 180 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.  யூசுப் பதான் 85 சிக்ஸர்களும், ராபின் உத்தப்பா 85 சிக்ஸர்கள் அடித்து அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளனர். இவரைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரும் 31 ரன்களில் வெளியேறினார். ஆண்ட்ரே ரஸில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

58
ஆர்சிபி

ஆர்சிபி

இறுதியாக வந்த ரிங்கு சிங் மற்றும் டேவிட் வீசா இருவரும் ஓரளவு அடிக்க இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது. பந்து வீச்சில் விஜயகுமார் வைஷாக் மற்றும் ஹசரங்கா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார். 

68
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு பாப் டூபிளெசிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஷாபாஸ் அஹமது 2 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து மஹிபால் லோம்ரார், விராட் கோலியுடன் இணைந்து ரன்கள் சேர்த்தார். ஆனால், அவரும் நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. அவர் 34 ரன்களில் வெளியேறினார்.

78
கேகேஆர்

கேகேஆர்

ஒருகட்டத்தில் அரைசதம் அடித்த விராட் கோலி 37 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். ஹசரங்கா 5 ரன்னில் வெளியேற தினேஷ் கார்த்திக் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆர்சிபி 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 179 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

88
கேகேஆர்

கேகேஆர்

புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் இருந்த கேகேஆர், இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(70.4 ov)237/4
Day 2 - Session 3
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image2
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Recommended image3
என்னா அடி! அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம்.. 35 பந்துகளில் சதம்.. சாதனை மேல் சாதனை படைத்த இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved