"மேக்ஸ்வெல் நீ செய்றது குற்றம் கொஞ்சம் கூட நல்லா இல்ல" மேக்ஸ்வெல்லை முகத்துக்கு நேராக பேசிய வாசிம் ஜாபர் ..!
First Published Dec 8, 2020, 9:48 AM IST
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் நடைபெற்று முடிவடைந்தது . 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. கடைசி ஒரு நாள் ஆட்டத்தை இந்திய அணி வென்றது

இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். அதேபோல் இரண்டாவது போட்டியில் 29 பந்துகளில் 63 ரன்கள் அடித்து துவம்சம் செய்தார்.

இந்த தொடர் துவங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிக்கொண்டிருந்தார். இவரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பெரிதாக அப்படி ஏதும் செய்யவில்லை. 11 போட்டிகளில் ஆடி வெரும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார்
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?