வாய்ப்புக்காக 7 ஆண்டுகளாக போராட்டம் - 13 பவுண்டரி, 9 சிக்ஸர் விளாசல்: மீண்டும் கர்ஜிக்கத் தயாரா கருண் நாயர்?
இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க கடுமையாக உழைத்து வரும் கருண் நாயர், மகாராஜா டி20 தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Karun Nair
இந்திய அணியால் மறக்கப்பட்ட ஒரு அதிரடி பேட்ஸ்மேன் தான் கருண் நாயர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர். தற்போது 32 வயதாகும் கருண் நாயர், கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றார். கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
Maharaja T20 Trophy
இதுவரையில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 374 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 303 (நாட் அவுட்) ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதோடு, வீரேந்திர சேவாக்கிற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
Karun Nair - Indian Cricket Team
டெஸ்ட் கிரிக்கெட்டைத் தவிர 2016 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். ஆனால், கடைசியாக அந்த தொடரில் மட்டுமே விளையாடினார். இதுவரையில் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 46 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.
Karun Nair - Maharaja T20 Trophy 2024
இந்த நிலையில் தான் தற்போது மகாராஜா டி20 டிராபி தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்த தொடரில் 48 பந்துகளில் 13 பவுண்டரி, 9 சிக்ஸர் உள்பட 124* ரன்கள் குவித்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வுக்குழுவிற்கு சவால்விட்டுள்ளார். ரஞ்சி டிராபி தொடரில் விதர்பா அணியில் இடம் பெற்று விளையாடிய கருண் நாயர் 690 ரன்கள் குவித்தார். மேலும், இறுதிப் போட்டியில் மும்பையிடம் தோற்று விதர்பா 2ஆவது இடம் பிடித்தது.
Maharaja T20 Trophy
தற்போது நடைபெற்று வரும் மகாராஜா டி20 டிராபி தொடரில் மைசூரு வாரியர்ஸ் அணியின் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வரும் கருண் நாயர் 12 இன்னிங்ஸ் 162.69 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 532 ரன்கள் குவித்துள்ளார். இது குறித்து பேசிய கருண் நாயர் கூறியிருப்பதாவது: இதுவரையில் நான் விளையாடியதைப் போன்று இப்போதும் பேட்டிங் செய்கிறேன். 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் திரும்பவது எனது கனவாக உள்ளது.
Karun Nair
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் முழு கவனம் செலுத்தி விளையாடுவேன். மேலும், கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி நான் மீண்டும் முன்னேறிச் செல்ல முடியும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.