MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Kane Williamson: இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த 'கேன் மாமா'.. சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கேன் வில்லியம்சன்!

Kane Williamson: இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த 'கேன் மாமா'.. சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கேன் வில்லியம்சன்!

Kane Williamson: இந்திய ரசிகர்களால் 'கேன் மாமா' என அன்புடன் அழைக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 12 2026, 05:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கேன் வில்லியம்சன் ஓய்வு
Image Credit : Getty

கேன் வில்லியம்சன் ஓய்வு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான வில்லியம்சன், தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை இந்த அறிவிப்பின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (NZC) இணையதளத்தில் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கேப்டன்சியிலும் அசத்தல்
Image Credit : Getty

கேப்டன்சியிலும் அசத்தல்

35 வயதாகும் வில்லியம்சன், தனது நாட்டுக்காக 378 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 19,346 ரன்கள் குவித்துள்ளார். இதில் 48 சதங்களும், 6 இரட்டை சதங்களும் அடங்கும். இந்த ஓய்வு அறிவிப்பால், இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடரில் அவர் இனிமேல் விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார். அவரது பேட்டிங் மட்டுமல்ல, கேப்டன்ஷிப்பும் கிரிக்கெட் உலகில் பெரிதும் பாராட்டப்பட்டது.

 2016 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், நியூசிலாந்து அணியின் பொற்காலத்தில் மூன்று வடிவங்களிலும் கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையில்தான், 2021-ல் நடந்த முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூசிலாந்து வென்றது. மேலும், இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளுக்கும், மூன்று அரையிறுதிப் போட்டிகளுக்கும் அணியை வழிநடத்தியுள்ளார்.

Related Articles

Related image1
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் 4ஆவது சதம் – SAவை ஓட ஓட விரட்டிய கேன் வில்லியம்சன் சதம் விளாசி சாதனை!
Related image2
இந்தியர்களுக்கு பிடித்த 'கேன் மாமா'..! கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு..! ரசிகர்கள் ஷாக்!
35
ஓய்வு பெற இதுவே சரியான நேரம்
Image Credit : Getty

ஓய்வு பெற இதுவே சரியான நேரம்

கடந்த நவம்பர் மாதம் T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வில்லியம்சன், தற்போது முழுமையாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக இதுவே சரியான நேரம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து வில்லியம்சன் பேசுகையில், "சிறிது காலமாக இதைப்பற்றி யோசித்து வந்தேன். ஆனால், இதுதான் சரியான நேரம் என்பது கடந்த சில நாட்களில் தெளிவாகத் தெரிந்தது. சர்வதேச கிரிக்கெட் மீது எனக்கு எப்போதும் ஒரு தீராத தாகம் இருந்தது. நியூசிலாந்துக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினேன் என்பதில் பெருமை கொள்கிறேன். இனிமேலும் இதைவிடக் குறைவாகத் தொடர்வது சரியாக இருக்காது. என் விருப்பப்படி ஓய்வு பெறுவதில் மகிழ்ச்சி" என்று NZC இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சாதனைகளின் மன்னன் வில்லியம்சன்

வில்லியம்சனின் சாதனைகளின் பட்டியல் மிகப்பெரியது. 2015-ல் ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரர், 2019-ல் சிறந்த டெஸ்ட் வீரர் போன்ற விருதுகளை வென்றுள்ளார். சர் ரிச்சர்ட் ஹாட்லி பதக்கத்தை நான்கு முறை வென்று சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட்டில் வில்லியம்சனின் சாதனைகள் ஏராளம். சர்வதேசப் போட்டிகளில் 19,346 ரன்களுடன் அதிக ரன் குவித்த வீரர், அதிக சதங்கள் (48), அதிக இரட்டை சதங்கள் (6) என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். டெஸ்ட் போட்டிகளில் 9,515 ரன்கள், 33 சதங்கள், 6 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். மேலும், தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் இவரே.

45
பல்வேறு விருதுகள்
Image Credit : ANI

பல்வேறு விருதுகள்

கேப்டனாக, 40 டெஸ்ட் போட்டிகளில் 22 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். 91 ஒருநாள் போட்டிகளில் 46 வெற்றிகளையும், 75 T20 போட்டிகளில் 39 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளார். இது T20-ல் ஒரு நியூசிலாந்து கேப்டனின் அதிகபட்ச வெற்றியாகும். 2019 உலகக் கோப்பை தொடர் நாயகன், 2019 ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர், 2018 ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது என பல தனிப்பட்ட விருதுகளையும் வென்றுள்ளார். 2010-ல் அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து தனது வருகையை அழுத்தமாக பதிவு செய்தவர் வில்லியம்சன்.

55
'கேன் மாமா' ஓய்வால் இந்தியர்கள் ஷாக்
Image Credit : ANI

'கேன் மாமா' ஓய்வால் இந்தியர்கள் ஷாக்

கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி எதிரணி வீரர்களிடம் எந்த அளவுக்கு சண்டை போட்டும் என்பதும் அறிந்ததே. ஆனால் ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்து அமைதிக்கு பெயர்போன ஒரு அணியாக உள்ளது. நியூசிலாந்து வீரர்கள் எதிரணி வீரர்களிடம் எந்த சண்டைக்கும் செல்லாமல் அமைதியாக இருப்பதால் உலகின் அனைத்து ரசிகர்களுக்கும் அவர்களை பிடிக்கும்.

இதேபோல் கேன் வில்லியம்சனும் தோல்வி கண்டாலும் சிரித்த முகத்துடன் வலம் வருபவர். இதனால் நியூசிலாந்து அணியையும், கேன் வில்லியம்சனையும் இந்தியர்களுக்கு அதிகம் பிடிக்கும். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் விளையாடிய வில்லியம்சனை இந்திய ரசிகர்கள் 'கேன் மாமா' என்று பாசத்துடன் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: அறிமுகப் போட்டியிலேயே இப்படியா? அயர்லாந்து ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதில் சிக்கல்? ரசிகர்கள் ஷாக்!
Recommended image2
இந்தியா Vs ஆப்கானிஸ்தான் 1st ODI: மேட்ச் வின்னர் அதிரடி நீக்கம்.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
Recommended image3
T20 World Cup: மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் மோதல் எப்போது? எந்த டிவியில் பார்க்கலாம்? முழு விவரம்!
Related Stories
Recommended image1
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் 4ஆவது சதம் – SAவை ஓட ஓட விரட்டிய கேன் வில்லியம்சன் சதம் விளாசி சாதனை!
Recommended image2
இந்தியர்களுக்கு பிடித்த 'கேன் மாமா'..! கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு..! ரசிகர்கள் ஷாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved