- Home
- Sports
- Sports Cricket
- சதமடித்து நம்பர் 1 இடத்தை பிடித்த கேன் வில்லியம்சன்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான சாதனை
சதமடித்து நம்பர் 1 இடத்தை பிடித்த கேன் வில்லியம்சன்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான சாதனை
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த கேன் வில்லியம்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சமகாலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கேன் வில்லியம்சன். நியூசிலாந்தின் ஆல்டைம் சிறந்த கிரிக்கெட்டர் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன்.
சர்வதேச கிரிக்கெட்டில் 2010ம் ஆண்டு நியூசிலாந்து அணியில் அறிமுகமான கேன் வில்லியம்சன், 92 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 87 டி20 போட்டிகளில் ஆடி மொத்தமாக சுமார் 17 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார்.
ஐபிஎல்லில் இருந்து விலகும் பும்ரா..? மும்பை இந்தியன்ஸுக்கு மரண அடி
நியூசிலாந்து அணிக்கு ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் மிகச்சிறந்த பங்களிப்பை செய்துள்ளார். 2019 ஒருநாள் உலக கோப்பையை கிட்டத்தட்ட நியூசிலாந்து வென்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும். எந்த உலக கோப்பையையும் வென்றிராத அணியான நியூசிலாந்து அணிக்கு, ஐசிசி முதல் முறையாக நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று நியூசிலாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைநிமிர்த்தினார்.
டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகி டெஸ்ட் அணியில் ஒரு வீரராக மட்டுமே ஆடிவரும் கேன் வில்லியம்சன், இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். இந்த டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸ் முடிவில் 226 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியில் பொறுப்புடன் பேட்டிங் ஆடி கேன் வில்லியம்சன் சதமடித்து 132 ரன்களை குவிக்க, டாம் பிளண்டெல் 90 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 483 ரன்களை குவித்தது. 257 ரன்கள் நியூசிலாந்து முன்னிலை பெற, 258 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்து அணி விரட்டிவருகிறது.
இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7787 ரன்களை குவித்து, டெஸ்ட்டில் அதிக ரன்களை குவித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கேன் வில்லியம்சன்.
சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் என் மீது காட்டிய அன்பு, அக்கறையை மறக்கவேமாட்டேன்! வாசிம் அக்ரம் உருக்கம்
112 டெஸ்ட் போட்டிகளில் 7683 ரன்களை குவித்த ரோஸ் டெய்லர் தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். 92 டெஸ்ட்டில் 7787 ரன்களை குவித்த கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லரை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார்.