#AUSvsIND 2வது டெஸ்ட்டுக்கான ஆஸி., அணியை அறிவித்தார் ஹெட் கோச் ஜஸ்டின் லாங்கர்
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி என்னவென்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி(பாக்ஸிங் டே டெஸ்ட்), வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, 2வது போட்டியில் வென்று இந்த தொடரில் கம்பேக் கொடுக்கும் முனைப்பில் உள்ள நிலையில், ஆஸி., அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. கடைசி 3 டெஸ்ட்டிலும் கோலி, ஷமி ஆகியோர் ஆடாததால் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும்.
ஆனால் ஆஸி., அணியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வெற்றி பெற்ற முதல் டெஸ்ட் அணி காம்பினேஷனையே அப்படியே தொடரவுள்ளது ஆஸி., அணி. இந்த தகவலை ஆஸி., அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். 2வது டெஸ்ட்டில், முதல் டெஸ்ட்டில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கப்போவதாக ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணி:
மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வு, நேதன் லயன்.