- Home
- Sports
- Sports Cricket
- நட்புன்னா என்னனு தெரியுமா! ஸ்மிருதி மந்தனாவுக்காக ஜெமிமா செய்த தியாகம்! வியந்துபோன ரசிகர்கள்!
நட்புன்னா என்னனு தெரியுமா! ஸ்மிருதி மந்தனாவுக்காக ஜெமிமா செய்த தியாகம்! வியந்துபோன ரசிகர்கள்!
திருமணம் நின்றதால் சோகத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்காக தோழியும், சக வீராங்கனையுமான ஜெமிமா ஒரு தியாகம் செய்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜெமிமா ரோட்ரிக்ஸின் தியாகம்
மகளிர் பிக் பாஷ் லீக்கில் இருந்து இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகியுள்ளார். சோகத்தில் உள்ள ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆதரவாக இருக்க அனுமதி கேட்ட அவரது கோரிக்கையை பிரிஸ்பேன் ஹீட் அணி ஏற்றுக்கொண்டது.
WWBB-ல் இருந்து ஜெமிமா விலகல்
வெபர் மகளிர் பிக் பாஷ் லீக்கில் (WWBB) பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணிக்காக ஜெமிமா விளையாடுகிறார். ஸ்மிருதி திருமணத்திற்காக இந்தியா வந்தார். ஆனால் ஸ்மிருதி தந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக திருமணம் நின்றதால், தோழிக்கு ஆதரவாக இருக்க WBBL-ல் இருந்து விலகியுள்ளார்.
ஸ்மிருதி பற்றி பிரிஸ்பேன் ஹீட்ஸ்
ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்றது குறித்து பிரிஸ்பேன் ஹீட்ஸ் நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த கடினமான சூழலில் ஸ்மிருதியும் அவரது குடும்பத்தினரும் தைரியமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா நட்பு
ஸ்மிருதியும் ஜெமிமாவும் நெருங்கிய தோழிகள். தோழி சோகத்தில் இருக்கும்போது கிரிக்கெட் விளையாடுவது சரியல்ல என ஜெமிமா நினைத்தார். இதனால் WBBL வாய்ப்பை விட்டுக்கொடுத்து நட்புக்கு முக்கியத்துவம் தந்தார்.
ஸ்மிருதியை பலாஷ் ஏமாற்றினாரா?
ஸ்மிருதி-பலாஷ் திருமணம் நின்றதற்கு பலாஷின் முறையற்ற உறவே காரணம் என வதந்திகள் பரவுகின்றன. மேரி டி கோஸ்டா என்ற பெண் வெளியிட்ட வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீன்ஷாட்கள் வைரலாகின.
சோகத்தில் ஸ்மிருதி
திருமணம் நின்ற பிறகு, ஸ்மிருதி மந்தனா தனது சமூக ஊடக கணக்குகளில் இருந்து திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை நீக்கினார். பலாஷ் முச்சல் ப்ரொபோஸ் செய்த வீடியோவையும் நீக்கினார்.

