ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பும்ராவை ஓரங்கட்டிய பிசிசிஐ - WTC தான் காரணமா?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் இடம் பெறவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஜஸ்ப்ரித் பும்ரா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் இடம் பெறவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஜஸ்ப்ரித் பும்ரா
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும் இழந்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
ஜஸ்ப்ரித் பும்ரா
இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்ப்ரித் பும்ரா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜஸ்ப்ரித் பும்ரா
கடந்த 17 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடி 263 ரன்கள் சேர்த்தது. இந்தியா 262 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து அடிமேல் அடி தான் விழுந்தது.
ஜஸ்ப்ரித் பும்ரா
ரவீந்திர ஜடேஜாவின் சுழல் மாயாஜாலத்தால் ஆஸ்திரேலியா 113 ரன்களில் சுருண்டது. இதில், ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் 2 நாட்கள் எஞ்சிய நிலையில், எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஜஸ்ப்ரித் பும்ரா
ரோகித் சர்மாவும் வரலாற்றில் இடம் பிடித்தார். ஆம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரன் அவுட்டில் வெளியேறினார். அவர் 31 ரன்கள் எடுத்தார். விராட் கோலி, 20, ஷ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த புஜாரா மற்றும் ஸ்ரீகர் பரத் ஆகியோர் இணைந்து நிலைத்து நின்று ஆடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
ஜஸ்ப்ரித் பும்ரா
இறுதியா இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
ஜஸ்ப்ரித் பும்ரா
அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டிலும் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெற வில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா ஐசிசி உலகக் கோப்பையில் பும்ரா பங்கேற்கவில்லை. இவ்வளவு ஏன், இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு திடீரென்று தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஜஸ்ப்ரித் பும்ரா
இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பெறவில்லை. முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது நன்கு பந்து வீசி வருகிறார். அப்படியிருக்கும் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் அவர் இடம் பெறாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை கருத்தில் கொண்டு பிசிசிஐ பும்ராவை ஓய்வில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.