சரித்திர நாயகன் பும்ரா – ஆர்சிபிக்கு எதிராக 5 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனை படைத்த ஜஸ்ப்ரித்!
ஆர்சிபிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5ஆவது லீக் போட்டியில் மும்பை வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
Jasprit Bumrah 5 Wickets, MI vs RCB
வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
MI vs RCB
அதன்படி ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கோலி 3 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 5ஆவது முறையாக பும்ரா பந்தில் கோலி ஆட்டமிழந்துள்ளார்.
Mumbai Indians vs Royal Challengers Bengaluru, 25th Match
இவரைத் தொடர்ந்து அறிமுக வீரராக களமிறங்கிய வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து கேப்டன் பாப் டூப் ளெசிஸ் உடன் ரஜத் படிதார் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இதில், படிதார் 26 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 50 ரன்கள் எடுத்து ஜெரால்டு கோட்ஸி பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
MI vs RCB 25th Match
பொறுப்பை உணர்ந்து விளையாடிய பாப் டூப் ளெசிஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸ் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அவர் அடித்த முதல் அரைசதம் இதுவாகும். தினேஷ் கார்த்திக் மட்டும் நின்று விளையாடினார்.
Mumbai Indians vs Royal Challengers Bengaluru, 25th Match
ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மஹிபால் லோம்ரார் 0, வைஷாக் விஜயகுமார் 0, சௌரவ் சௌகான் 9 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
Mumbai Indians vs Royal Challengers Bengaluru, 25th Match
இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Mumbai Indians vs Royal Challengers Bengaluru, 25th Match
பவுலிங்கை பொறுத்த வரையில் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். ஆர்சிபிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை தனதாக்கினார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
MI vs RCB IPL 25th Match
இதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள ஆசிஷ் நெஹ்ரா சென்னை அணியில் இடம் பெற்று விளையாடிய போது ஆர்சிபி அணிக்கு எதிராக அதிகபட்சமாக 4/10 விக்கெட்டுகள் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
Mumbai Indians vs Royal Challengers Bengaluru, 25th Match
இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் நைடர்ஸ் அணிக்கு எதிராக 5/10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். ஆனால், அந்தப் போட்டியில் மும்பை தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஏற்கனவே ஜேம்ஸ் பாக்னர், ஜெயதேவ் உனத்கட், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் 3ஆவது ஓவர் வீசிய பும்ரா அடுத்து 11ஆவது ஓவர் வீசினார். மீண்டும் 17ஆவது ஓவர் வீசினார்.
Bumrah vs Kohli
இந்த ஓவரில் பாப் டூப்ளெசிஸ் மற்றும் மகிபால் லோம்ரார் விக்கெட்டை எடுத்தார். கடைசியாக 19ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் சௌரவ் சௌகான் மற்றும் வைஷாக் விஜயகுமார் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். ஜெரால்டு கோட்ஸி, ஆகாஷ் மத்வால், ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டுகள் கைப்பற்றினர்.