IPL 2023: எல்லாமே சென்னைக்கு சாதகம்: தோனியை மீறி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தால் ஜெயிக்க முடியுமா?
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலாக இதுவரையில் நடந்த போட்டிகளில் சென்னை அணி தான் அதிக முறை வென்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 29ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வெற்றியும், 2 தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. அதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றியும், 3 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. அதோடு, புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இதுவரையில் 18 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 13 போட்டிகளில் சென்னை அணியும், 5 போட்டிகளில் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆதலால், இன்றைய போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
அப்படியே இருந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இதனால், பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
அப்படி பேட்டிங்கிற்கு சாதமான மைதானமாக இருந்தால் முதலில் பேட்டிங் ஆடும் அணி 220 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஏனென்றால், சென்னை அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் சம பலத்துடன் களமிறங்க உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பேட்டிங்கைப் பொறுத்த வரையில் ருத்துராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜின்க்யா ரகானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் என்று வரிசையாக பேட்டிங்கிற்கு இருக்கிறார்கள். பற்றாக்குறைக்கு தல தோனி வேறு இருக்கிறார். இது தவிர பந்து வீச்சிற்கு துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதிஷா பதீரனா, ஆகாஷ் சிங், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் என்று வரிசையாக இருக்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இதுவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஹாரி ப்ரூக், மாயங்க் அகர்வால், எய்டன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, புவனேஷ்வர்குமார், நடராஜன், மாயங்க் மார்கண்டே, அடில் ரஷீத், அகீல் ஹூசைன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினால் இன்றைய போட்டியில் சென்னையை வெல்ல வாய்ப்பிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இதுவரை ஹைதராபாத் அணிக்கு எதிராக 18 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 488 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் டெவான் கான்வே விக்கெட் கீப்பராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த போட்டியில் பாப் டூ ப்ளெசிஸ் கொடுத்த கேட்சை தோனியால் பிடிக்க முடியாமல் அவதிப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
அவருக்கு முழங்கால் பகுதியில் வலி ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக டெவான் கான்வே விக்கெட் கீப்பராக இருப்பார் என்று தெரிகிறது. தோனி பீல்டராக களமிறங்கலாம் அப்படி இல்லையென்றால் இம்பேக்ட் பிளேயராக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.