IPL 2023: அந்த ஒரு மூவ் தான் மாஸ்டர்ஸ்ட்ரோக்..! விராட் கோலியின் கேப்டன்சிக்கு இர்ஃபான் பதான் புகழாரம்
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 3வது ஓவரை வீச வனிந்து ஹசரங்காவை அழைத்து வந்தது விராட் கோலியின் மாஸ்டர்ஸ்ட்ரோக் என்று இர்ஃபான் பதான் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, டுப்ளெசிஸ் (84) மற்றும் விராட் கோலி(59) ஆகிய இருவரது அரைசதத்தால் 20 ஓவரில் 174 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.
175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 24 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆர்சிபி அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய சிராஜ் 4 விக்கெட் வீழ்த்தியதுடன், ஒரு ரன் அவுட்டும் செய்து ஆர்சிபி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த போட்டியில் டுப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி பேட்டிங் மட்டும் ஆடியதால் விராட் கோலி தான் இந்த போட்டியில் கேப்டன்சி செய்தார். விராட் கோலியின் கேப்டன்சி மிக அருமையாக இருந்தது. பவுலர்களை பயன்படுத்திய விதம், வெற்றிகரமான ரிவியூ, ஃபீல்டிங் செட்டப் என அனைத்துமே அருமையாக இருந்தது. விராட் கோலியின் சிறப்பான கேப்டன்சியால் தான் ஆர்சிபி அணி ஜெயித்தது.
இந்நிலையில், விராட் கோலியின் கேப்டன்சி குறித்து பேசிய இர்ஃபான் பதான், விராட் கோலி வேற லெவல் எனர்ஜியை அணிக்குள் கொண்டுவந்தார். எனர்ஜி மட்டுமல்லாது அவரது முடிவுகளும், பவுலிங் சுழற்சியும் மிகச்சிறப்பாக இருந்தது. 3வது ஓவரிலேயே ஹசரங்காவை பந்துவீச வைத்தது மாஸ்டர்ஸ்ட்ரோக். மேத்யூ ஷார்ட் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுவார் என்பதை தெரிந்தே ஹசரங்காவை அழைத்துவந்தார். ஹசரங்கா மேத்யூ ஷார்ட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போதே ஆர்சிபி அணிக்கு பிடிமானம் வலுவாகிவிட்டது. விராட் கோலியின் எனர்ஜி அணி முழுவதும் பரவியதற்கு கிடைத்த பரிசு தான் 2 ரன் அவுட்டுகள் என்று இர்ஃபான் பதான் புகழாரம் சூட்டினார்.