- Home
- Sports
- Sports Cricket
- GT vs LSG: குஜராத் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுமா லக்னோ! பிளேயிங் லெவன்!
GT vs LSG: குஜராத் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுமா லக்னோ! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? குஜராத் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

IPL Today: GT vs LSG Match – Team Prediction, Head-to-Head:
ஐபிஎல் 2025 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதல்
சுப்மன் கில்லின் குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் இரண்டு இடங்களுக்குள் தங்கள் இடத்தைப் பிடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும். மறுபுறம், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூபர் ஜெயண்ட்ஸ் அணி முந்தைய போட்டியில் தோல்வியடைந்து பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த போட்டியில் வெற்றியைப் பதிவு செய்து, 2025 ஐபிஎல் பயணத்தை சிறப்பாக முடிக்க விரும்பும்.
குஜராத் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உள்ள மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது, மேலும் அதிக ஸ்கோர் பெறும் போட்டிக்கான வாய்ப்பு உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் பிட்ச் கைகொடுக்கும். டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்யக்கூடும். ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
மழை பெய்ய வாய்ப்புள்ளதா?
அக்யூவெதர் படி, அகமதாபாத்தில் ஆட்டத்தின் தொடக்கத்தில் வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும், இறுதியில் 33 டிகிரி செல்சியஸாகக் குறையும். போட்டி நேரங்களில் ஈரப்பதம் 37% முதல் 49% வரை ஏற்ற இறக்கமாக இருக்கும். வானம் தெளிவாக இருக்கும். இந்த போட்டி முழுவதும் மழை பெய்ய வாய்ப்பில்லை.
அதிகப்பட்ச ஸ்கோர், குறைந்தப்பட்ச ஸ்கோர் என்ன?
குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மொத்தம் 40 போட்டிகள் நடந்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணிகள் 19 போட்டிகளில் வென்றுள்ளன. இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் 21 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு இல்லை.
இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 170 ஆகும். இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகப்பட்ச ஸ்கோர் 243 ஆகும். குறைந்தப்பட்ச ஸ்கோர் 89 ஆகும். வெற்றிகரமாக துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 2024 ஆகும்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், வில்லியம் ஓர்ர்கே
குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ராகுல் தெவாட்டியா, ஷாருக்கான், அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.