MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL: MI-க்கு சாதகமாக அம்பயர்கள்? ஹர்திக்கிற்கு ஒரு ரூல்.. ஸ்டப்ஸ்க்கு ஒரு ரூலா? என்ன நடந்தது?

IPL: MI-க்கு சாதகமாக அம்பயர்கள்? ஹர்திக்கிற்கு ஒரு ரூல்.. ஸ்டப்ஸ்க்கு ஒரு ரூலா? என்ன நடந்தது?

IPL 2026 தொடரில் நடுவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக நடக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பை, ஆர்சிபி போட்டியில் என்ன நடந்தது? என்பது குறித்து பார்ப்போம்.

3 Min read
Author : Rayar r
Published : Apr 13 2026, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர்
Image Credit : AI

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர்

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகையா? நேற்று ஆர்சிபிக்கு எதிரான போட்டியின் 12-வது ஓவரைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். அதுவும் ஒருமுறை அல்ல, இரண்டு முறை. காரணம், க்ளவுஸ் மாற்றும் விஷயத்தில் அம்பயர்கள் காட்டிய இரட்டை நிலைப்பாடுதான். 24 மணி நேரத்திற்கு முன்பு டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்க்கு மறுப்பு தெரிவித்த அம்பயர்கள், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அனுமதி கொடுத்தது பெரிய விவாதமாக மாறியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஹர்திக் பாண்ட்யா க்ளவுஸ் மாற்ற அனுமதி
Image Credit : Screengrab

ஹர்திக் பாண்ட்யா க்ளவுஸ் மாற்ற அனுமதி

அதாவது மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கின் 12-வது ஓவரில் சுயாஷ் ஷர்மா வீசிய பந்தில் ஹர்திக் பவுண்டரி அடித்தாலும், பேட் அவர் கைகளில் சரியாகப் படியவில்லை. உடனே க்ளவுஸை மாற்ற ஹர்திக் கேட்க, அம்பயரும் அனுமதித்தார். ஆனால், கொடுக்கப்பட்ட க்ளவுஸில் ஹர்திக் திருப்தி அடையவில்லை. அடுத்த பந்தில் ஷாட் அடிக்க முயன்றபோதும், க்ரிப் கிடைக்காமல் சிரமப்பட்டார். 

அதனால் மீண்டும் க்ளவுஸை மாற்ற வேண்டும் என்று கேட்டார். இந்த முறையும் அம்பயர் மும்பைக்கு சாதகமாகவே முடிவெடுத்தார். ஆனால், அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மட்டும் கூறினார். இருப்பினும், பெங்களூரு அணிக்கு ஹர்திக்கால் பெரிய சவாலைத் தர முடியவில்லை. அவர் 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Related Articles

Related image1
Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Related image2
Vaibhav Suryavanshi: கெயில் ரெக்கார்டுக்கு ஆப்பு? ஐபிஎல்-ஐ மிரட்டும் 15 வயது ‘சின்ன’ புயல் வைபவ்..!
34
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் க்ளவுஸ் மாற்ற அனுமதி இல்லை
Image Credit : ANI

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் க்ளவுஸ் மாற்ற அனுமதி இல்லை

ஹர்திக் பாண்ட்யா கிளவுஸ் மாற்ற அம்பயர்கள் இருமுறை அனுமதி கொடுத்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி அணிகள் மோதிய போட்டியின் 19-வது ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் க்ளவுஸ் மாற்ற அம்பயர்கள் மறுப்பு தெரிவித்து இருந்தனர். டெல்லி வெற்றி பெற 12 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டது. 36 பந்துகளில் 60 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற ஸ்டப்ஸ் போராடிக்கொண்டிருந்தார். 

சென்னை பந்துவீச்சாளர்களை விட, அங்கு நிலவிய கடும் வெப்பம் அவருக்கு பெரிய சவாலாக இருந்தது. அதிக வியர்வையால் க்ரிப் கிடைக்காததால், ஓவரின் இரண்டாவது பந்துக்குப் பிறகு க்ளவுஸை மாற்ற ஸ்டப்ஸ் அம்பயரிடம் அனுமதி கேட்டார்.

டெல்லி வீரர்கள் அதிருப்தி

ஆனால், நான்காவது அம்பயர், புதிய க்ளவுஸுடன் மைதானத்திற்குள் வர டெல்லி வீரர்களை அனுமதிக்கவில்லை. ஸ்டப்ஸின் கோரிக்கையையும் நிராகரித்துவிட்டார். இது நான்காவது அம்பயருக்கும், டெல்லி வீரர்களான நிதிஷ் ராணா, கருண் நாயர் ஆகியோருக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. டெல்லி பயிற்சியாளர் ஹேமங் பதானியும் அம்பருடன் ஏதோ பேசினார். இவ்வளவு அழுத்தம் இருந்தும், அம்பயர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டப்ஸ்

ஆனால் அடுத்த பந்திலேயே பெரிய ஷாட் அடிக்க முயன்ற ஸ்டப்ஸ் ஜேமி ஓவர்டன் பந்துவீச்சில், நூர் அஹமத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆட்டமிழந்து டிரெஸ்ஸிங் ரூம் திரும்பிய ஸ்டப்ஸ், கோபத்தில் தனது ஹெல்மெட்டை தூக்கி எறிந்து எதிர்ப்பைக் காட்டினார்.

 இதற்கிடையே, கிளவுஸ் விஷயத்தில் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிதிஷ் ராணாவுக்கு போட்டி சம்பளத்தில் 25% அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது. ஐபிஎல் நடத்தை விதிகளில் பிரிவு 2.3-ஐ மீறியதாக, அதாவது கேட்கக்கூடிய வகையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக இந்தத் தண்டனை கொடுக்கப்பட்டது.

44
ஐபிஎல் விதி சொல்வது என்ன?
Image Credit : X@IPL

ஐபிஎல் விதி சொல்வது என்ன?

ஐபிஎல் விதிப்படி, டைம்-அவுட் மற்றும் ஓவர்களுக்கு இடையிலான இடைவேளைகளில் மட்டுமே வீரர்கள் க்ளவுஸ் அல்லது மற்ற உபகரணங்களை மாற்றிக்கொள்ள முடியும். ஓவரின் நடுவே மாற்ற அனுமதி இல்லை. க்ளவுஸ் கிழிந்துபோவது அல்லது பேட் சேதமடைவது போன்ற ஏதாவது முக்கிய காரணம் இருந்தால் மட்டுமே விதிவிலக்கு. 

இல்லையெனில் வீரர்களுக்கு ஆபத்தான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என அம்பயர் நினைத்தால் அனுமதி வழங்கலாம். இப்படி ஒரு விதி இருக்கும்போதுதான், ஹர்திக் பாண்டியாவுக்கு அனுமதி கொடுத்தது கேள்விகளை எழுப்பியுள்ளது.

பொங்கியெழும் ரசிகர்கள்

டிரிஸ்டன் ஸ்டப்ஸின் விஷயத்தையும், ஹர்திக்கின் விஷயத்தையும் ஒப்பிடும்போது ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். ஹர்திக்கின் கைகளில் இருந்து க்ரிப் இல்லாமல் பேட் நழுவிச் சென்றது. இது ஒருவேளை ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதி அம்பயர் அனுமதி அளித்திருக்கலாம். 

ஆனால், இதே நிலைமை ஸ்டப்ஸுக்கும் பொருந்தும். இருந்தாலும், அம்பயர்களின் இந்த முடிவை ரசிகர்கள் சும்மா விடத் தயாராக இல்லை. இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு முன்பும் பலமுறை அம்பயர்கள் மும்பை இந்தியன்ஸுக்கு சாதகமாக முடிவெடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
மும்பை இந்தியன்ஸ்
ஹர்திக் பாண்டியா
டெல்லி கேபிடல்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
15 வயசு சிறுவனின் அசுர வேட்டை.. பும்ராவின் வீழ்ச்சி.. PBKSன் சோக கதை.. செம ட்விஸ்ட் கொடுத்த IPL 2026
Recommended image2
IPL 2026: RCB vs GT மேட்ச் மழையால் ரத்தானால் பைனலுக்கு யாருக்கு வாய்ப்பு! ரிசர்வ் டே உண்டா?
Recommended image3
IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
Related Stories
Recommended image1
Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Recommended image2
Vaibhav Suryavanshi: கெயில் ரெக்கார்டுக்கு ஆப்பு? ஐபிஎல்-ஐ மிரட்டும் 15 வயது ‘சின்ன’ புயல் வைபவ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved