- Home
- Sports
- Sports Cricket
- IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!
IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!
Sooryavanshi: 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த சீசனில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. இந்த ஐபிஎல் தொடரில் மிக நீளமான சிக்ஸர் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் யார் என்பதை பார்க்கலாம்.

மிக நீளமான சிக்ஸர் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்
இந்த ஐபிஎல் சீசனில் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான இவர், இந்த சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்து ஒரு புதிய மைல்கல்லை எட்டினார். ஆனாலும், மிக நீளமான சிக்ஸர் அடித்த டாப் 5 வீரர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்கவில்லை. அப்படியென்றால், இந்த சீசனில் மெகா சிக்ஸர் அடித்த அந்த டாப் 5 வீரர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
முதல் இடத்தில் திலக் வர்மா (மும்பை இந்தியன்ஸ்)
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் திலக் வர்மா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சில் 106 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிக்ஸர் அடித்து பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பினார். இதுவே இந்த சீசனின் மிக நீளமான சிக்ஸராக பதிவாகியுள்ளது.
2வது இடத்தில் டிம் டேவிட் (ஆர்சிபி)
ஆர்சிபி-யின் பவர் ஹிட்டர் டிம் டேவிட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 106 மீட்டர் சிக்ஸர் அடித்து மிரட்டினார். அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் இந்த மெகா சிக்ஸரை அடித்து இந்த சீசனின் இரண்டாவது நீளமான சிக்ஸரை பதிவு செய்தார்.
3வது இடத்தில் டேவிட் மில்லர் (டெல்லி கேப்பிட்டல்ஸ்)
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸர் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த இமாலய சிக்ஸரை அடித்து மிரட்டிய மில்லர் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
4வது இடத்தில் ஜேக்கப் பெதெல் (ஆர்சிபி)
ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜேக்கப் பெதெல், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் 104 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். இதன் மூலம், மிக நீளமான சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
5வது இடத்தில் கூப்பர் கான்ஹோலி (பஞ்சாப் கிங்ஸ்)
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தவர் பேட்ஸ்மேன் கூப்பர் கான்ஹோலி. இந்த சீசனின் மிக நீளமான சிக்ஸர்கள் பட்டியலில் இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கான்ஹோலி 103 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிக்ஸரை விளாசினார்.

