MI, KKR, RR, SRH, CSK அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?
IPL 2025 Playoff Chances : ஐபிஎல் 2025 தொடரின் 74 போட்டிகளில் 39 போட்டிகள் முடிந்த நிலையில் பிளே ஆஃப் வாய்ப்பு யார் யாருக்கு அமையும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

IPL 2025 Playoff Chances : ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நம்ப முடியாத வகையில் பல சுவாரஸ்யங்கள் இந்த சீசனில் நடந்துள்ளது. அதோடு, அனுபவ வீரர்களை விட இளம் வீரர்கள் தான் ஐபிஎல் 2025 தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த சீசனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பெரியளவில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளன.
ஆனால், எதிர்பார்க்கப்படாத குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் சிறப்பாக விளையாடி புள்ளிகள் பெற்று வருகின்றன. இதுவரையில் 39 போட்டிகள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதே போன்று முறையே டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
ஐபிஎல் தொடரில் ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் விளையாடும் 14 போட்டிகளில் குறைந்தது 16 புள்ளிகள் பெற வேண்டும். அதிகபட்சமாக ஒரு அணி 20 புள்ளிகள் கூட பெறும். அப்படித்தான் கடந்த சீசனிலும் நடந்திருக்கிறது. ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:
தற்போது வரையில் ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் (GT), டெல்லி கேபிடல்ஸ் (DC), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. இந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்புகள் அதிகளவில் இருக்கும் நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள் உள்ளன.
இதுவே புள்ளிப்பட்டியலில் கடைசி 3 இடங்களை பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு இந்த 3 அணிகளும் எஞ்சிய போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் அல்லது குறைவான விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியில் கூட தோற்க கூடாது.
ஏனென்றால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி முதல் 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. எனினும் எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதே வாய்ப்பு இப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு உள்ளது.
புள்ளிப்பட்டியல் நிலவரம்
GT (8 போட்டிகள், 12 புள்ளிகள்) மற்றும் DC (7 போட்டிகள்), RCB (8 போட்டிகள்), PBKS (8 போட்டிகள்) மற்றும் LSG (8 போட்டிகள்) ஆகிய 4 அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. MI (8 போட்டிகள், 8 புள்ளிகள்), KKR (8 போட்டிகள், 6 புள்ளிகள்), RR (8 போட்டிகள், 4 புள்ளிகள்), SRH (7 போட்டிகள், 4 புள்ளிகள்) மற்றும் CSK (8 போட்டிகள், 4 புள்ளிகள்) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
SRH, RR மற்றும் CSK அணிகளுக்கு கடும் சவால்
SRH, RR மற்றும் CSK அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது கடினமாக உள்ளது. இந்த அணிகள் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். நெட் ரன் ரேட் அடிப்படையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
MI மற்றும் KKR அணிகளுக்கு இடையே போட்டி
தொடக்கத்தில் தடுமாறிய MI அணி, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிக்கு இன்னும் 6 போட்டிகள் உள்ளன. குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். KKR அணி 7 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிக்கு இன்னும் 7 போட்டிகள் உள்ளன. குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.
எதிர்பார்ப்பு:
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அணிகள் விளையாடும் விதத்தை வைத்து பார்க்கையில் டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளில் ஏதேனும் ஒரு அணி ஐபிஎல் டிராபி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் இந்த அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆகையால், இந்த அணிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.