ஐபிஎல் 2025 ஏலம்: முதல் நாளில் வாங்கப்பட்ட 10 அணி வீரர்களின் பட்டியல்!
IPL 2025 Auction Team Wise Players List : சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களை பற்றி பார்க்கலாம்...

IPL 2025 Auction Players List
IPL 2025 Auction Team Wise Players List : ஐபிஎல் 2025 மெகா ஏலம் பிரம்மாண்ட அளவில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டு வந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் வெங்கடேஷ் ஐயர் மீது எந்த நம்பிக்கையும் இல்லாத நிலையிலும் அவர் ரூ.23.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது தான் இங்கு ஆச்சரியப்பட வைக்கிறது.
IPL 2025 Mega Auction, Most Expensive Players List
கேஎல் ராகுல் ரூ.14 கோடிக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டார். இது அவர் வாங்கி வந்த சம்பளத்தை விட ரூ.3 கோடி குறைவுதான். லக்னோ அணியின் கேப்டனாக விளையாடி வந்த கேஎல் ராகுலுக்கு லக்னோ ரூ.17 கோடி சம்பளம் கொடுத்தது. கடந்த ஆண்டு அவரது ஃபெர்பார்மன்ஸ் காரணமாக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அர்ஷ்திப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
2025 ஆம் ஆண்டுக்கான ஐபில் ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனவர். இவர்களில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள். ஆனால், 70 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 204 வீரர்களுக்கான ஏலம் தான் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 134 இந்திய வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2025 Auction Players List
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் முதல் நாள் நேற்று ஏலம் எடுக்கப்பட்ட 72 வீரர்களில் 24 வெளிநாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் தான் அதிக வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் எடுக்கப்பட்ட வீரர்கள் மற்றும் ஏலத்தொகை பற்றி பார்க்கலாம்.
IPL 2025 Auction, CSK IPL 2025 Auction Players List
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் அகமது ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
| வரிசை எண் | வீரர்கள் | அடிப்படை விலை | ஏல தொகை ரூபாயில் | கேப்டு/அன்கேப்டு | வெளிநாடு/இந்தியா |
| 1. | நூர் அகமது | 2 கோடி | 10 கோடி | கேப்டு வீரர் | வெளிநாடு |
| 2. | ரவிச்சந்திரன் அஸ்வின் | 2 கோடி | 9.75 கோடி | கேப்டு வீரர் | இந்தியா |
| 3. | டெவோன் கான்வே | 2 கோடி | 6.25 கோடி | கேப்டு வீரர் | வெளிநாடு |
| 4. | சையது கலீல் அகமது | 2 கோடி | 4.80 கோடி | கேப்டு வீரர் | இந்தியா |
| 5. | ரச்சின் ரவீந்திரா | 1.75 கோடி | 4 கோடி | கேப்டு வீரர் | வெளிநாடு |
| 6. | ராகுல் திரிபாதி | 75 லட்சம் | 3.40 கோடி | கேப்டு வீரர் | இந்தியா |
| 7. | விஜய் சங்கர் | 30 லட்சம் | 1.20 கோடி | அன்கேப்டு வீரர் | இந்தியா |
KKR IPL 2025 Auction Players List
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கேகேஆர் அணியைப் பொறுத்த வரையில் அதிகபட்சமாக ரூ.23.75 கோடிக்கு வெங்கடேஷ் ஐயர் ஏலம் எடுக்கப்பட்டார். குயீண்ட் டி காக் ரூ.3.60 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்துள்ளார்.
| வரிசை எண் | வீரர்கள் | அடிப்படை விலை | ஏல தொகை ரூபாயில் | கேப்டு/அன்கேப்டு | வெளிநாடு/இந்தியா |
| 1. | வெங்கடேஷ் ஐயர் | 2 கோடி | 23.75 கோடி | கேப்டு | இந்தியா |
| 2. | ஆன்ரிச் நோர்ட்ஜே | 2 கோடி | 6.50 கோடி | கேப்டு | வெளிநாடு |
| 3. | குயீண்டன் டி காக் | 2 கோடி | 3.60 கோடி | கேப்டு | வெளிநாடு |
| 4. | அங்கிரிஸ் ரகுவன்ஷி | 30 லட்சம் | 3 கோடி | அன்கேப்டு | இந்தியா |
| 5. | ரஹ்மானுல்லா குர்பாஸ் | 2 கோடி | 2 கோடி | கேப்டு | வெளிநாடு |
| 6. | வைபவ் அரோரா | 30 லட்சம் | 1.80 கோடி | அன்கேப்டு | இந்தியா |
| 7. | மாயங்க் மார்க்கண்டே | 30 லட்சம் | 30 லட்சம் | அன்கேப்டு | இந்தியா |
LSG IPL 2025 Auction Players List
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
லக்னோ அணியைப் பொறுத்த வரையில் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். லக்னோ அணியைப் பொறுத்த வரையில் ரிஷப் பண்ட் கேப்டனாகவும், நிக்கோலஸ் பூரன் துணை கேப்டனாகவும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் லக்னோ அணிக்கு திரும்பியுள்ளனர்.
| வரிசை எண் | வீரர்கள் | அடிப்படை விலை | ஏல தொகை ரூபாயில் | கேப்டு/அன்கேப்டு | வெளிநாடு/இந்தியா |
| 1. | ரிஷப் பண்ட் | 2 கோடி | 27 கோடி | கேப்டு | இந்தியா |
| 2. | ஆவேஷ் கான் | 2 கோடி | 9.75 கோடி | கேப்டு | இந்தியா |
| 3. | டேவிட் மில்லர் | 1.5 கோடி | 7.50 கோடி | கேப்டு | வெளிநாடு |
| 4. | அப்துல் சமாத் | 30 லட்சம் | 4.20 கோடி | அன்கேப்டு | இந்தியா |
| 5. | மிட்செல் மார்ஷ் | 2 கோடி | 3.40 கோடி | கேப்டு | வெளிநாடு |
| 6. | எய்டன் மார்க்ரம் | 2 கோடி | 2 கோடி | கேப்டு | வெளிநாடு |
| 7. | ஆர்யன் ஜூயல் | 30 லட்சம் | 30 லட்சம் | அன்கேப்டு | இந்தியா |
Delhi Capitals IPL 2025 Auction Players List
டெல்லி கேபிடல்ஸ்:
டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
| வ.எண் | வீரர்கள் | அடிப்படை விலை | ஏலத் தொகை ரூபாயில் | கேப்டு/அன்கேப்டு | இந்தியா/வெளிநாடு |
| 1. | கேஎல் ராகுல் | 2 கோடி | 14 கோடி | கேப்டு | இந்தியா |
| 2. | மிட்செல் ஸ்டார்க் | 2 கோடி | 11.75 கோடி | கேப்டு | வெளிநாடு |
| 3. | டி நடராஜன் | 2 கோடி | 10.75 கோடி | கேப்டு | இந்தியா |
| 4. | ஜாக் ஃப்ரேஸர் மெக்கர்க் | 2 கோடி | 9 கோடி | கேப்டு | வெளிநாடு |
| 5. | ஹாரி ஃப்ரூக் | 2 கோடி | 6.25 கோடி | கேப்டு | வெளிநாடு |
| 6. | அஷுதோஷ் சர்மா | 30 லட்சம் | 3.80 கோடி | அன்கேப்டு | இந்தியா |
| 7. | மோகித் சர்மா | 50 லட்சம் | 2.20 கோடி | அன்கேப்டு | இந்தியா |
| 8. | சமீர் ரிஸ்வி | 30 லட்சம் | 95 லட்சம் | அன்கேப்டு | இந்தியா |
| 9. | கருண் நாயர் | 30 லட்சம் | 50 ல்ட்சம் | அன்கேப்டு | இந்தியா |
GT IPL 2025 Auction Players List
குஜராத் டைட்டன்ஸ்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஜோஸ் பட்லரை குஜராத் டைட்டைல் அதிக தொகைக்கு ஏலம் எடுத்தது. சுப்மன் கில்லின் ஃபெர்பாமான்ஸ் கடந்த சீசனில் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக இப்போது ஜோஸ் பட்லர் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
| வ.எண் | வீரர்கள் | அடிப்படை விலை | ஏலத் தொகை ரூபாயில் | கேப்டு/அன்கேப்டு | இந்தியா/வெளிநாடு |
| 1. | ஜோஸ் பட்லர் | 2 கோடி | 15.75 கோடி | கேப்டு | வெளிநாடு |
| 2. | முகமது சிராஜ் | 2 கோடி | 12.25 கோடி | கேப்டு | இந்தியா |
| 3. | கஜிசோ ரபாடா | 2 கோடி | 10.75 கோடி | கேப்டு | வெளிநாடு |
| 4. | பிரஷித் கிருஷ்ணா | 2 கோடி | 9.50 கோடி | கேப்டு | இந்தியா |
| 5. | மகிபால் லோம்ரோர் | 50 லட்சம் | 1.70 கோடி | கேப்டு | இந்தியா |
| 6. | குமார் குஷாக்ரா | 30 லட்சம் | 65 லட்சம் | அன்கேப்டு | இந்தியா |
| 7. | மானவ் சுதர் | 30 லட்சம் | 30 லட்சம் | அன்கேப்டு | இந்தியா |
| 8. | அனுஜ் ராவத் | 30 லட்சம் | 30 லட்சம் | அன்கேப்டு | இந்தியா |
| 9. | நிஷாந்த் சிந்து | 30 லட்சம் | 30 ல்ட்சம் | அன்கேப்டு | இந்தியா |
MI IPL 2025 Auction Players List
மும்பை இந்தியன்ஸ்:
ராஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வந்த டிரெண்ட் போல்டை மும்பை இந்தியன்ஸ் ரூ.12.50 கோடிக்கு வாங்கியது. ஏற்கனவே டிரெண்ட் போல்ட் மும்பை அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| வ.எண் | வீரர்கள் | அடிப்படை விலை | ஏலத் தொகை ரூபாயில் | கேப்டு/அன்கேப்டு வீரர்கள் |
| 1. | டிரெண்ட் போல்ட் | 2 கோடி | 12.50 கோடி | கேப்டு |
| 2. | நமன் தீர் | 30 லட்சம் | 5.25 கோடி | அன்கேப்டு |
| 3. | ராபின் மின்ஸ் | 30 லட்சம் | 65 லட்சம் | அன்கேப்டு |
| 4. | கரண் சர்மா | 50 லட்சம் | 50 லட்சம் | அன்கேப்டு |
IPL Auction
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக மும்பை அணிக்காக விளையாடியிருக்கிறார்.
| வ.எண் | வீரர்கள் | அடிப்படை விலை | ஏலத் தொகை ரூபாயில் | கேப்டு/அன்கேப்டு வீரர்கள் |
| 1. | ஜோஃப்ரா ஆர்ச்சர் | 2 கோடி | 12.50 கோடி | கேப்டு |
| 2. | வணிந்து ஹசரங்கா | 2 கோடி | 5.25 கோடி | கேப்டு |
| 3. | மகீஷ் தீக்ஷனா | 2 கோடி | 4.40 கோடி | கேப்டு |
| 4. | ஆகாஷ் மத்வால் | 30 லட்சம் | 1.20 கோடி | அன்கேப்டு |
| 5. | குமார் கார்த்திகேயா சிங் | 30 லட்சம் | 30 லட்சம் | அன்கேப்டு |
RCB IPL 2025 Auction Players List
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஆர்சிபி அணி இந்த முறை மற்ற அணிகளால் விடுவிக்கப்பட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால், அவர்கள் அனைவரும் கடந்த சீசன்களில் பெரிதாக ஒன்றும் தாக்கத்தை ஏற்படுத்தாத வீரர்கள். இதுவரையில் ஒரு முறை கூட டிராபி ஜெயிக்காத ஆர்சிபி இந்த முறை டிராபி ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| வ.எண் | வீரர்கள் | அடிப்படை விலை | ஏலத் தொகை ரூபாயில் | கேப்டு/அன்கேப்டு வீரர்கள் |
| 1. | ஜோஷ் ஹேசில்வுட் | 2 கோடி | 12.50 கோடி | கேப்டு |
| 2. | பில் சால்ட் | 2 கோடி | 11.50 கோடி | கேப்டு |
| 3. | ஜித்தேஷ் சர்மா | 1 கோடி | 11 கோடி | கேப்டு |
| 4. | லியாம் லிவிங்ஸ்டன் | 2 கோடி | 8.75 கோடி | கேப்டு |
| 5. | ரஷீக் தர் | 30 லட்சம் | 6 கோடி | அன்கேப்டு |
| 6. | சுயாஷ் சர்மா | 30 லட்சம் | 2.60 கோடி | அன்கேப்டு |