MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2024: ஏலத்திற்கு பதிவு செய்த 1166 வீரர்களிலிருந்து 833 வீரர்கள் நீக்கம் – 333 வீரர்களுக்கு மட்டுமே ஏலம்!

IPL 2024: ஏலத்திற்கு பதிவு செய்த 1166 வீரர்களிலிருந்து 833 வீரர்கள் நீக்கம் – 333 வீரர்களுக்கு மட்டுமே ஏலம்!

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் போட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Dec 12 2023, 07:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
IPL Auction 2024

IPL Auction 2024

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 2024ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக வரும் 19ஆம் தேதி முதல் முறையாக துபாயில் ஐபிஎல் 2024 ஏலம் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வைத்துள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Indian Premier League 2024

Indian Premier League 2024

இந்த நிலையில் தான், ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பதிவு செய்த 1166 வீரர்களில் 833 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு 333 வீரர்கள் மட்டுமே இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடருக்கான வீரர்களின் ஏலத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

36
IPL 2024 Auction Players List

IPL 2024 Auction Players List

துபாயில் டிசம்பர் 19, 2023 அன்று கோகோ கோலா அரங்கத்தில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் மட்டும் 333 வீரர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த 333 வீரர்களில் 214 வீரர்கள் இந்தியர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் இதில், 2 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

46
IPL 2024 Auction Dubai

IPL 2024 Auction Dubai

இதில் 116 வீரர்கள் (Capped) கேப்டு வீரர்கள். அதாவது சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள். மேலும், 215 வீரர்கள் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் இடம் பெறுகின்றனர். அதாவது Uncapped என்று சொல்லப்படும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள். இது தவிர அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 2 வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 10 செட்டுகளாக வீரர்களின் ஏலம் நடைபெற இருக்கிறது. இதில், ஒவ்வொரு செட்டிலும், பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர், பவுலர், பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர், பவுலர் என்று வீரர்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது.

56
IPL Auction 2024

IPL Auction 2024

ஐபிஎல் தொடரில் இடம் பெறும் 10 அணிகளில் மொத்தமாக 77 வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது. இதில், 30 வீரர்கள் வெளிநாட்டவர்கள். 45 வீரர்கள் இந்தியர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 2 வீரர்கள் என்று மொத்தமாக 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்.

66
IPL 2024 Auction

IPL 2024 Auction

இதில், 23 வீரர்கள் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயித்துள்ளனர். ரூ.1.5 கோடி பட்ஜெட்டில் 13 வீரர்கள் இருக்கின்றனர். ரூ.1 கோடிக்கான ரேஸில் 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர ரூ.50 லட்சத்தை ரச்சின் ரவீந்திரா தனது அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளார்.  இந்த ஏலத்திற்கு மொத்தமாக ரூ.262.95 கோடி வரையில் செலவு செய்யப்பட இருக்கிறது. ஐபிஎல் ஏலமானது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரடிப்படி பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்க இருக்கிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image2
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image3
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved