- Home
- Sports
- Sports Cricket
- இங்கிலாந்தில் இருந்து அவசரம், அவசரமாக இந்தியா திரும்பிய கவுதம் கம்பீர்! ஏன் தெரியுமா?
இங்கிலாந்தில் இருந்து அவசரம், அவசரமாக இந்தியா திரும்பிய கவுதம் கம்பீர்! ஏன் தெரியுமா?
தாயார் உடல்நிலைக்குறவு காரணமாக இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார்.

India vs England Test Series Gautam Gambhir Returned to India
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடவில் விளையாடும் 18 பேர் கொண்ட அணி இங்கிலாந்து சென்று அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவசரம், அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார்.
இந்தியா திரும்பிய கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீரின் தாயார் சீமாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் கவுதம் கம்பீர் உடனடியாக இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். கென்ட்டில் இந்தியா vs இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிக்கு தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்பாக கம்பீர் இந்தியா திரும்பினார்.
குடும்ப அவசரநிலை
"குடும்ப அவசரநிலை காரணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்புகிறார்" என்று பிசிசிஐ வட்டாரங்கள் செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்தன. ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு கம்பீர் மீண்டும் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பீரின் பங்கு முக்கியம்
கம்பீர் இல்லாத நிலையில், வெள்ளிக்கிழமை தொடங்கி இந்தியா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் இன்ட்ரா-ஸ்குவாட் போட்டியில் விளையாடும் சீனியர் இந்திய அணி, பேட்டிங் பயிற்சியாளர் சிதாங்ஷு கோடக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் ஆகியோரின் கீழ் செயல்பட வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் மேற்கொள்ளும் முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இதுவாகும். ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்திய டெஸ்ட் அணி ஒரு பெரிய மாற்றத்தை கடந்து வருவதால் அவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
வெற்றி கட்டாயத்தில் இந்திய அணி
இந்திய அணி கடைசியாக கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தது. கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தால் இங்கிலாந்து தொடரில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி மற்றும் கவுதம் கம்பீர் உள்ளார். சுப்மன் கில் தலைமையில் இந்தியா வெற்றி வாகை சூடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.