எந்த சொந்தமும் பேசல, உதவல.. எங்கள யாரும் மதிக்கல.. கேவலமா பாத்தாங்க: இந்தியா கிரிக்கெட்டர் நடராஜன் அம்மா
First Published Dec 7, 2020, 7:36 AM IST
இந்திய அணிக்காக தனது முதலாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வெள்ளிக்கிழமை வீழ்த்தி அசத்தியிருக்கிறார், சேலம் - சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் ஒட்டு மொத்த உலகமும் நடராஜனை பாராட்டி வாழ்த்தும் இந்த நேரத்தில் நடராஜன் தயார் அவர்கள் கடந்து வந்த வேதனை சோதனைகள் பற்றி பேசியுள்ளார்

கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் நடராஜன் ஈர்த்து வரும் அதே சமயம், சத்தமே இல்லாமல் அமைதியாக சின்னப்பம்பட்டியில் மகனின் விளையாட்டுத்திறனை அவரது குடும்பத்தினர் ரசித்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி விளையாடி வரும் வேளையிலும், அப்பா கூலி நெசவாளியாகவும், அம்மா கறிக் கடையில் சில்லி போட்டு விற்பனை செய்பவராகவும் எந்த அடையாளமும் மாறாமல் அப்படியே உள்ளனர்
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?