- Home
- Sports
- Sports Cricket
- HBD Rahul Dravid: 12 வயது முதல் கிரிக்கெட் ஆடிய ராகுல் டிராவிட்டின் சாதனை துளிகள் இதோ!
HBD Rahul Dravid: 12 வயது முதல் கிரிக்கெட் ஆடிய ராகுல் டிராவிட்டின் சாதனை துளிகள் இதோ!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ராகுல் டிராவிட் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் சரத் டிராவிட்
ராகுல் சரத் டிராவிட் என்ற முழு பெயர் கொண்ட டிராவிட் கடந்த 1973 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தார். கிரிக்கெட்டில், தி வால், தி கிரேட் வால், ஜம்மி, மிஸ்டர் டிபெண்டபிள் என்று பல வேறு அழைக்கப்படுகிறார். சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பகுதி நேர விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார்.
First ODI: ஒரு நாள் போட்டி
கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் அறிமுகமானார். கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியே ராகுல் டிராவிட்டின் கடைசி ஒரு நாள் போட்டி. ஒரு நாள் போட்டியில் 10,899 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டி - 13,288 ரன்கள்
கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியே ராகுல் டிராவிட்டின் கடைசி டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் போட்டியில் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 2ஆவது வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் பெற்றுள்ளார்.
HBD Rahul Dravid
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 90 ரன்களில் 10 முறை அவுட்டாகியுள்ளார். 179 டெஸ்ட் போட்டியில் விளையாடி 9000 ரன்கள் சேர்த்துள்ளார்.
Happy Birthday Rahul Dravid: பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகுல் ஜி!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 4 இன்னிங்ஸில் சதம் விளாசிய ஒரே ஒரு வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரையில் நடந்த போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக 3 சதங்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு சதமும் விளாசியுள்ளார்.
210 கேட்சுகள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பீல்டராக மட்டும் 210 கேட்சுகள் வரையில் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அதிக பந்துகளை சந்தித்தவர் என்ற சாதனையும் இவரையே சேரும். 31, 258 பந்துகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்திருக்கிறார்.
100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் கூட கோல்டன் டக் முறையில் வெளியேறியது கிடையாது. 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பிற்கு உறுதுணையாக இருந்துள்ளார். இதில், 20 முறை சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்துள்ளார்.
735 மணி நேரம், 52 நிமிடம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கிட்டத்தட்ட 735 மணி நேரம், 52 நிமிடம் வரையில் களத்தில் நின்று சாதனை படைத்திருக்கிறார்.
44, 152 நிமிடம்
அதாவது, அதிகப்படியான நிமிடங்கள் களத்தில் நின்ற ஒரேயொரு வீரர் ராகுல் டிராவிட் மட்டுமே. கிட்டத்தட்ட 44, 152 நிமிடம் வரையில் பேட்டிங் செய்திருக்கிறார்.