MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Vijay Shankar Retirement: கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன விஜய் சங்கர்!திடீர் முடிவுக்கான பின்னணி!

Vijay Shankar Retirement: கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன விஜய் சங்கர்!திடீர் முடிவுக்கான பின்னணி!

Vijay Shankar Retirement: இந்திய அணி வீரர் விஜய் சங்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Rayar r
Published : May 22 2026, 08:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விஜய் சங்கர் ஓய்வு
Image Credit : GOOGLE

விஜய் சங்கர் ஓய்வு

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் போன்ற முக்கிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
Image Credit : ANI

உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

விஜய் சங்கர் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால் இந்த முறை ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. இந்நிலையில், தற்போது அவர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

Related Articles

Related image1
TNPL லில் பேட்டிங், பவுலிங்கில் அசத்தும் விஜய் சங்கர்! வறுத்தெடுக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்! ஏன்?
Related image2
டெல்லியை வெற்றி பெற வைத்த தோனி-விஜய் சங்கர்! முட்டுகொடுத்த ருத்ராஜ்! ரசிகர்கள் கோபம்!
35
திடீர் முடிவு ஏன்?
Image Credit : PTI

திடீர் முடிவு ஏன்?

இந்த முறை ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறிய உடனேயே, விஜய் சங்கர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடும் நோக்கில் அவர் இந்த திடீர் முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
45
இந்திய அணிக்காக ஆடினார்
Image Credit : Getty

இந்திய அணிக்காக ஆடினார்

விஜய் சங்கர் இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2019 உலகக் கோப்பை தொடரில், ஆல்-ரவுண்டர் கோட்டாவில் 4-ம் இடத்திற்கும், பந்துவீச்சுக்காகவும் அவர் அணியில் சேர்க்கப்பட்டார்.
55
 ஐபிஎல் பயணத்தை சிஎஸ்கே அணியுடன் தொடங்கினார்.
Image Credit : Getty

ஐபிஎல் பயணத்தை சிஎஸ்கே அணியுடன் தொடங்கினார்.

விஜய் சங்கர் தனது ஐபிஎல் பயணத்தை 2013-ல் சிஎஸ்கே அணியுடன் தொடங்கினார். அதன்பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளில் விளையாடி, மீண்டும் சிஎஸ்கே அணிக்குத் திரும்பினார். குஜராத் டைட்டன்ஸ் கோப்பை வென்ற அணியிலும் விஜய் சங்கர் இடம்பெற்றிருந்தார்.

உலகக்கோப்பை அறிமுக பந்துவீச்சு சாதனை: 2019 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் ஓவரை வீச வந்த விஜய் சங்கர், தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். உலகக்கோப்பையில் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் இவர்தான்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
இந்திய கிரிக்கெட் அணி
சிஎஸ்கே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi Brother: அண்ணன் வைபவ் சூர்யவன்ஷிக்கு சவால் விடும் 10 வயது தம்பி.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?
Recommended image2
Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அட! தோற்றாலும் இத்தனை கோடிகள் கிடைக்குமா?
Recommended image3
Kane Williamson: இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த 'கேன் மாமா'.. சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கேன் வில்லியம்சன்!
Related Stories
Recommended image1
TNPL லில் பேட்டிங், பவுலிங்கில் அசத்தும் விஜய் சங்கர்! வறுத்தெடுக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்! ஏன்?
Recommended image2
டெல்லியை வெற்றி பெற வைத்த தோனி-விஜய் சங்கர்! முட்டுகொடுத்த ருத்ராஜ்! ரசிகர்கள் கோபம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved