- Home
- Sports
- Sports Cricket
- ஆஸ்திரேலியாவை வச்சு வச்சு செய்யும் இந்தியா: ஹப்பா, நாக்பூர், டெல்லி ஓகே- அப்புறம் இந்தூரா?
ஆஸ்திரேலியாவை வச்சு வச்சு செய்யும் இந்தியா: ஹப்பா, நாக்பூர், டெல்லி ஓகே- அப்புறம் இந்தூரா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த கடந்த 3 டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்தியா
இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. முதல்கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்தது.
கப்பா டெஸ்ட் வெற்றி
இதில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட் மற்றும் 70 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டும் கைப்பற்றினார். இதன் மூலமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாக்பூர் டெஸ்ட் வெற்றி
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 17 ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடி 263 ரன்கள் குவித்தது. இதில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், ஷமி 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது.
டெல்லி டெஸ்ட் வெற்றி
இந்திய அணியில் ரோகித் சர்மா 32, விராட் கோலி 44, அக்ஷர் படேல் 74 ரன்கள் சேர்க்க இந்தியா 262 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 139 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த இந்திய அணியில் 8ஆவது விக்கெட்டிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி 114 ரன்கள் வரையில் எடுத்தது. அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், டிரேவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தனர். எனினும், டிரேவிஸ் ஹெட் 43 ரன்னிலும், லபுஷேன் 35 ரன்களும் எடுத்து ஆடடமிழந்தனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ரவீந்திர ஜடேஜா 12.1 ஓவர்கள் வரை வீசி ஒரேயொரு மெய்டன் மட்டுமே போட்டு 7 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை சரித்துள்ளார். அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்ற ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது.
அக்ஷர் படேல்
எளிய இலக்கை நோக்கிய விளையாடிய இந்திய அணிக்கு தொடர்ந்து சொதப்பி வரும் கேஎல் ராகுல் இந்த முறையும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரோகித் சர்மாவும் 31 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டில் வெளியேறினார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 20 ரன்கள் சேர்த்து ஸ்டெம்பிங்கில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஷ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களில் வெளியேற இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்ரீகர் பரத்
இதில், விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 23 ரன்னுடனும், சட்டீஸ்வர் புஜாரா 31 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளும் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயன் விருது பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலமாக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின்
இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலாக நடந்த ஹப்பா டெஸ்ட், நாக்பூர் டெஸ்ட் மற்றும் டெல்லி ஆகிய போட்டிகளில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.
ரவீந்திர ஜடேஜா
இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலாக நடந்த ஹப்பா டெஸ்ட், நாக்பூர் டெஸ்ட் மற்றும் டெல்லி ஆகிய போட்டிகளில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. ஹப்பாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.