- Home
- Sports
- Sports Cricket
- Shubman Gill: கடைசி ஒருநாள் போட்டியில் வெளுத்துகட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்! இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு
Shubman Gill: கடைசி ஒருநாள் போட்டியில் வெளுத்துகட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்! இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 357 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடைசி ஒருநாள் போட்டியில் வெளுத்துகட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்! இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு
இந்தியா, இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்ற உத்வேகத்தில் இந்திய அணியும், ஒரு போட்டியிலாவது ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணியும் களம் இறங்கின.
விராட் கோலி அரைசதம்
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில், விராட் கோலி ஜோடி தங்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நீண்ட நாட்களாக ரன் சேர்ப்பதில் சிரமப்பட்ட விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் அரை சதம் கடந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
சதம் விளாசிய சுப்மன் கில்
இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கில் இந்த போட்டியில் சதம் கடந்து 112 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு இமாலய இலக்கு
சாதனை பட்டியல்
அரை சதம் கடந்த விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 4000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
95 பந்துகளில் சதம் விளாசி சுப்மன் கில் அணியின் ஸ்கோர் உயர பங்காற்றினார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 50 இன்னிங்ஸ்களில் 2500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சுப்மன் கில்.