MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்தியா Vs ஆப்கானிஸ்தான் 1st ODI: மேட்ச் வின்னர் அதிரடி நீக்கம்.. இந்திய அணி பிளேயிங் லெவன்!

இந்தியா Vs ஆப்கானிஸ்தான் 1st ODI: மேட்ச் வின்னர் அதிரடி நீக்கம்.. இந்திய அணி பிளேயிங் லெவன்!

IND vs AFG 1st ODI: இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 13-ம் தேதி நடைபெற உள்ளது. நமது அணியில் மேட்ச் வின்னர் நீக்கப்படுகிறார். இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 11 2026, 10:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா, ஆப்கானிஸ்தான் முதல் ஓடிஐ
Image Credit : AFP

இந்தியா, ஆப்கானிஸ்தான் முதல் ஓடிஐ

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 13-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. தர்மசாலாவில் உள்ள HPCA ஸ்டேடியத்தில் முதல் போட்டி நடக்கிறது. கேப்டன் சுப்மன் கில், இந்த போட்டிக்கு ஒரு மாஸ்டர் பிளானுடன் தயாராகி வருகிறார். சில முக்கிய வீரர்களை வெளியேற்றி, அணியில் பெரிய மாற்றங்களைச் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜெய்ஸ்வாலுக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை
Image Credit : Getty

ஜெய்ஸ்வாலுக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், கேப்டன் சுப்மன் கில் மற்றும் சீனியர் வீரர் ரோகித் சர்மா ஆகியோர் ஓப்பனிங்கில் உறுதியாகிவிட்டது. ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் ரோகித் சர்மா தற்போது 4-வது இடத்தில் இருக்கிறார். இடது கை பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இருந்தாலும், முதல் போட்டியில் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கடினம்.

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரன் மெஷின் விராட் கோலி, இந்தத் தொடரில் விளையாடவில்லை. அதனால், அவரது 3-ம் நம்பர் இடத்தில் இஷான் கிஷனை களமிறக்க அதிக வாய்ப்புள்ளது. இஷான் கிஷன் கடைசியாக 2023 அக்டோபர் 11 அன்று டெல்லியில் இதே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார்.

Related Articles

Related image1
IND vs AFG Test: அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்! மாஸ் காட்டிய மானவ் சுதார்! யார் இந்த 'குட்டி' ஜடேஜா!
Related image2
T20 World Cup: மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் மோதல் எப்போது? எந்த டிவியில் பார்க்கலாம்? முழு விவரம்!
34
3வது இடத்தில் இஷான் கிஷன்
Image Credit : Getty

3வது இடத்தில் இஷான் கிஷன்

மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய மற்ற வீரர்களை விட இஷான் கிஷனுக்கே கேப்டன் கில் முன்னுரிமை கொடுப்பார் எனத் தெரிகிறது. சமீபத்தில் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காகவும் இதே பேட்டிங் பொசிஷனில் அவர் சிறப்பாக விளையாடினார். துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 4-வது இடத்திலும், விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் 5-வது இடத்திலும் பேட்டிங் செய்வார்கள்.

ஸ்டார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். அவர் இல்லாததால், 6-வது இடத்தில் இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஸ்பின் ஆல்-ரவுண்டராக தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவுடன் இணைந்து சுழற்பந்துவீச்சுப் பொறுப்பை ஏற்பார். குல்தீப் யாதவ் இதுவரை 120 ஒருநாள் போட்டிகளில் 194 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பாஸ்ட் பவுலிங் எப்படி?

ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் இல்லாததால், இந்தத் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சுக்கு அர்ஷ்தீப் சிங் தலைமை தாங்குவார். அவருடன் பிரசித் கிருஷ்ணா களமிறங்குவது உறுதியாகியுள்ளது. மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக பிரின்ஸ் யாதவ் அல்லது குர்னூர் பிரார் ஆகியோரில் யாருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்பது சுவாரஸ்யமாகியுள்ளது. இதில் டெல்லி பவுலர் பிரின்ஸ் யாதவுக்கே அதிக வாய்ப்பு கிடைக்கலாம்.

44
இந்திய அணி பிளேயிங் லெவன்
Image Credit : AFP

இந்திய அணி பிளேயிங் லெவன்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
Recommended image2
IND vs SL: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்! கில் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி!
Recommended image3
TNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி – ஜெகதீசன் அதிரடி 78 ரன்கள்!
Related Stories
Recommended image1
IND vs AFG Test: அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்! மாஸ் காட்டிய மானவ் சுதார்! யார் இந்த 'குட்டி' ஜடேஜா!
Recommended image2
T20 World Cup: மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் மோதல் எப்போது? எந்த டிவியில் பார்க்கலாம்? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved