MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • எங்களுக்கு பயம் இல்ல.. ரன் மெஷின் இந்தியா.. டி20 உலககோப்பையில் பிரம்மாண்டமான சாதனை!

எங்களுக்கு பயம் இல்ல.. ரன் மெஷின் இந்தியா.. டி20 உலககோப்பையில் பிரம்மாண்டமான சாதனை!

T20 World Cup Final Record: நடப்பு டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் 250 ரன்களை கடந்திருந்த இந்திய அணி, இறுதிப்போட்டியிலும் 250 ரன்களை கடந்து அசத்தியுள்ளது.

1 Min read
Author : Rayar r
Published : Mar 08 2026, 09:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய அணி இமாலய ரன்கள் குவிப்பு
Image Credit : Getty

இந்திய அணி இமாலய ரன்கள் குவிப்பு

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 255 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மோசமான பார்மால் விமர்சிக்கப்பட்ட அபிஷேக் ஷர்மா, இறுதிப்போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

24
சஞ்சு சாம்சன் காட்டடி
Image Credit : X@@ImTanujSingh

சஞ்சு சாம்சன் காட்டடி

சஞ்சு சாம்சன் சிக்ஸர் மழை பொழிந்து அதிரடி காட்டினார். இஷான் கிஷனுடன் இணைந்து அவர் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஹாட்ரிக் அரைசதம் அடித்தார். இதன்மூலம், டி20 உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்த ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்தார். 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி இரண்டிலுமே சதத்தை தவறவிட்டார்.

Related Articles

Related image1
IND vs NZ: இது அடியா இல்ல இடியா.. கிவிஸ் பவுலர்களை கதற விட்ட அபிஷேக் சர்மா.. அரை சதத்தில் சாதனை!
Related image2
ஆத்தாடி! என்னா அடி! மோடி மைதானத்தில் சேட்டனின் சம்பவம்.. கோலி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
34
இஷான் கிஷானும் அதிரடி
Image Credit : ANI

இஷான் கிஷானும் அதிரடி

மறுபுறம், இஷான் கிஷன் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 15 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது. ஆனால், இஷான் கிஷன் விக்கெட்டுக்குப் பிறகு இந்தியா தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 300 ரன்களை நெருங்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஷிவம் துபே அதிரடியாக ஆடி 26 ரன்கள் எடுத்ததால், 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது.

44
டி20 உலககோப்பையில் வரலாற்று சாதனை
Image Credit : X/BCCI

டி20 உலககோப்பையில் வரலாற்று சாதனை

இதன்மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றின் இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. நடப்பு டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் 250 ரன்களை கடந்திருந்த இந்திய அணி, இறுதிப்போட்டியிலும் 250 ரன்களை கடந்து அசத்தியுள்ளது. மேலும் இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி 3 முறை 250 ரன்களுக்கு மேலாக எடுத்து சாதனை படைத்துள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆத்தாடி! என்னா அடி! மோடி மைதானத்தில் சேட்டனின் சம்பவம்.. கோலி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
Recommended image2
IND vs NZ: இது அடியா இல்ல இடியா.. கிவிஸ் பவுலர்களை கதற விட்ட அபிஷேக் சர்மா.. அரை சதத்தில் சாதனை!
Recommended image3
டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அடேங்கப்பா! சாம்பியன் அணிக்கு இத்தனை கோடிகளா? முழு விவரம்!
Related Stories
Recommended image1
IND vs NZ: இது அடியா இல்ல இடியா.. கிவிஸ் பவுலர்களை கதற விட்ட அபிஷேக் சர்மா.. அரை சதத்தில் சாதனை!
Recommended image2
ஆத்தாடி! என்னா அடி! மோடி மைதானத்தில் சேட்டனின் சம்பவம்.. கோலி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved