MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஆரம்பிச்சு வச்ச யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷான் – முடிச்சு கொடுத்த ரிங்கு – இந்தியா 235 ரன்கள் குவிப்பு!

ஆரம்பிச்சு வச்ச யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷான் – முடிச்சு கொடுத்த ரிங்கு – இந்தியா 235 ரன்கள் குவிப்பு!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Nov 26 2023, 08:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
India vs Australia 2nd T20 Match

India vs Australia 2nd T20 Match

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டி தற்போது திருவனந்தபுரம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
இந்தியா - ஆஸ்திரேலியா 2ஆவது டி20

இந்தியா - ஆஸ்திரேலியா 2ஆவது டி20

முதல் டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜம்பாவை களத்தில் இறக்கியது.

39
Ishan Kishan

Ishan Kishan

ஆனால், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். இதில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசித் தள்ளினார். கிளென் மேக்ஸ்வெல் வீசிய 3ஆவது ஓவரில் மட்டும் 2 பவுண்டரி விளாசினார்.

49
Ruturaj Gaikwad

Ruturaj Gaikwad

இதையடுத்து 4ஆவது ஓவரை சீன் அபாட் வீச வந்தார். அவரது ஓவரில் மட்டுமே 4, 4, 4, 6, 6 என்று வரிசையாக பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி அந்த ஓவரில் 24 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக இந்திய அணி 4 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்தது.

59
இஷான் கிஷான் - இந்தியா - ஆஸ்திரேலியா

இஷான் கிஷான் - இந்தியா - ஆஸ்திரேலியா

தொடர்ந்து 6ஆவது ஓவரை நாதன் எல்லிஸ் வீச வந்தார். அவரது ஓவரிலும் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த ஜெய்ஸ்வால் 24 பந்துகளில் 53 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதாவது, டி20 போட்டியில் பவர்பிளே ஓவர்களில் அரைசதம் அடித்து அதிக ரன்கள் குவித்த ரோகித் சர்மா 50*(23) மற்றும் கேஎல் ராகுல் 50(19) சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தினார். எனினும், அவர் 25 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

69
இஷான் கிஷான் 52 ரன்கள்

இஷான் கிஷான் 52 ரன்கள்

இவரைத் தொடர்ந்து வந்த இஷான் கிஷான் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேக்ஸ்வெல் ஓவரில் சிக்ஸ், பவுண்டரி அடுத்தடுத்து விளாசினார்.

79
ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட்

கிஷான் 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக டி20 போட்டியில் ஒரு விக்கெட் கீப்பராக 50 ரன்களுக்கு மேல் 3ஆவது முறையாக எடுத்து தோனி (2), ரிஷப் பண்ட் (2) சாதனையை முறியடித்துள்ளார்.

89
Suryakumar Yadav

Suryakumar Yadav

கடைசியாக 32 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் 2 சிக்ஸ் விளாசி 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் தொடக்க வீரராக களமிறங்கி நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 39 பந்துகளில் 51 ரன்கள் அடித்த நிலையில், 43 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

99
IND vs AUS 2nd T20 Match

IND vs AUS 2nd T20 Match

அதன் பிறகு ரிங்க் சிங் மற்றும் திலக் வர்மா இணைந்து கடைசியில் அதிரடியாக விளையாடினர். கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் 9 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி உள்பட 31 ரன்கள் குவித்தார். திலக் வர்மா ஒரு சிக்ஸ் அடித்தார். இதன் மூலமாக இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கே. எல். ராகுல்
ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணி
 
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி!
Recommended image2
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image3
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved