ஆஸி.,யை வதம் செய்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி..!
ஆஸி.,க்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.
பிரிஸ்பேன் டெஸ்ட் வெற்றியின் மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் ஆரம்பத்தில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்கிங் வரிசைப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது, வெற்றி விகிதத்தின் அடிப்படையில் ரேங்கிங் தீர்மானிக்கப்படுகிறது.
அந்தவகையில், பிரிஸ்பேன் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, 71.7 சதவிகிதத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 70 சதவிகிதத்துடன் நியூசிலாந்து 2ம் இடத்திலும், 69.2 சதவிகிதத்துடன் ஆஸ்திரேலியா 3ம் இடத்திலும் உள்ளது.